டெல்லியில் சங்கிலி தொடர் குண்டு வெடிப்பு
டெல்லி:
![]() |
டெல்லியில் நடந்த தீவிரவாதிகளின் பயங்கர குண்டு வெடிப்பு தாக்குதலில் 100 பேர் பலியாயினர். மேலும் பலர்படுகாயமடைந்தனர்.
தலைநகர் டெல்லியில் முக்கிய மார்க்கெட் வீதிகளில் தீபாவளியை முன்னிட்டு அதிக கூட்டம் இருந்தது. இந்தநிலையில் தீவிரவாதிகள் அங்கு கைவரிசையை காட்டியுள்ளனர்.
அவர்கள் சங்கிலி தொடர்போல் 3 இடங்களில் குண்டுகளை வெடிக்கச் செய்துள்ளனர். முதல் குண்டு வெடிப்புசம்பவம் புது டெல்லி ரெயில் நிலையத்திற்கு எதிரிலுள்ள பகர்கஞ்ச் மர்க்கெட்டில் மாலை 5.40 மணிக்கு நடந்தது.
இந்த குண்டு ஸ்கூட்டரில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. குண்டு வெடித்ததில் அந்த பகுதியிலுள்ள கடைகள்இடிந்து விழந்தன. தீயும் பிடித்தது. இதனால் மார்க்கெட்டில் இருந்த மக்கள் அலறியபடி அங்குமிங்கும் ஓடினர்.
இந்த சம்பவத்தில் பெண்கள்,குழந்தைகைள் உள்பட 28 பேர் உடல் சிதறி செத்தனர். 40க்கும் அதிகமான பேர் தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் 2வது முறையாக தெற்கு டெல்லியில் உள்ள சரோஜினி நகர் மார்க்கெட்டில்மாலை 6.05 மணிக்கு சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் 39 பேர் உயிரழந்தனர். மேலும் 50 க்கும்மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
![]() |
2வது குண்டு வெடிப்பு நடந்த சற்று நேரத்தில் தெற்கு டெல்லியில் உள்ள மற்றொரு பகுதியான கோவிந்தபுரியில்ஓடும் பஸ்ஸில் குண்டு வெடித்தது. இதில் 3 பேர் பலியானார்கள். சிலர் காயமடைந்தனர்.
இந்த தகவலறிந்த போலீசாரும், தீயணைப்பு படையினரும் சம்பவயிடத்துக்கு விரைந்தனர். அந்த பகுதி கடைகளைசீல் வைத்துவிட்டு மக்களை பாதுகாப்பாக வெளியேற்றினர்.
இறந்தவர்களின் சடலங்களை மீட்டனர். காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காயமடைந்தவர்கள் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் சாவுஎண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த 3 இடங்களிலும் ஆர்.டி.எக்ஸ் வகை குண்டுகள் வெடித்துள்ளதாக புலனாய்வுத்துறை அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.
மேலும் டெல்லியிலுள்ள சாந்தினி சவுக், கோல் மார்க்கெட் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகளை போலீசார் கண்டுபிடித்து அப்புறப்படுத்தியுள்ளனர்.
![]() |
இந்த சம்பத்தால் டெல்லி நகர மக்கள் அதிர்ச்சியும் பீதியும் அடைந்துள்ளனர். இதனால் நகர் முழுவதும் உஷார்நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து தீவிரவாதிகளின் அடுத்த குறி ஐதராபாத், பெங்களூர், கொல்கத்தா, சென்னை போன்ற நகரங்களாகஇருக்கக் கூடும் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளதால் அந்த நகரங்களின் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிளில்பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
டெல்லி செங்கோட்டையை 2000ம் ஆண்டு தீவிரவாதிகள் தாக்கினர். இந்த சம்வத்தில் ஈடுபட்ட 7குற்றவாளிகளுக்கு நாளை தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து இந்த குண்டு வெடிப்புநடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து ஜெய்ப்பூர் மைதானத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது. இந்தியா-இலங்கை கிரிக்கெட் போட்டி நாளை நடக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 22 பேரை கைது செய்துள்ளனர். இவர்களிடம் தீவிரவிசாரணை நடந்து வருகிறது.
இந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடும் கண்டனம்தெரிவித்துள்ளார். இதே போல் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், அத்வானி ஆகியோரும் கண்டனம்தெரிவித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?















Click it and Unblock the Notifications