காஞ்சிக்குத் திரும்பினர் சங்கராச்சாரியார்கள்

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்:

சங்கரராமன் கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் விடுதலையாகியுள்ள ஜெயேந்திரரும், விஜயேந்திரரும் நீண்டஇடைவெளிக்குப் பிறகு மீண்டும் காஞ்சிபுரம் சங்கர மடத்திற்குத் திரும்பியுள்ளனர்.

வரதராஜபெருமாள் கொலை வழக்கில் சிக்கியுள்ள ஜெயேந்திரரும், விஜயேந்திரரும் தற்போது ஜாமீனில் விடுதலையாகியுள்ளனர்.

செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது. விசாரணைக்கு வராமல் இருசங்கராச்சாரியார்களும் கடந்த 2 மாதத்திற்கும் மேலாகவே திருப்பதியில் தங்கியிருந்தனர்.

இருவரும் நீதிமன்ற விசாரணையில் நேரில் ஆஜராவதிலிருந்து உச்சநீதிமன்றம் விலக்கு அளித்திருந்தது.

இந்த நிலையில் ஜெயேந்திரரின் கோரிக்கையை ஏற்று விசாரணையை புதுவை நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் மாற்றியுள்ளது.

இந்தப் புதிய சூழ்நிலையில் இரு சங்கராச்சாரியார்களும் காஞ்சிபுரம் திரும்பியுள்ளனர். காஞ்சிபுரம் வந்ததும் சங்கர மடத்திற்குச்சொந்தமான காமாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்று சுமார் அரை மணி நேரம் பூஜை செய்தனர்.

அதன் பின்னர் சங்கர மடத்திற்கு வந்தனர். அங்கு மட நிர்வாகிகள், வழக்கறிஞர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர்.தொடர்ந்து இருவரும் இஙகேயே தங்கியிருப்பர் என தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+