தமிழீழ தேசிய கீதம்: விடுதலைப் புலிகள் உருவாக்குகின்றனர்
கொழும்பு:
தமிழீழத்திற்கான தனி தேசிய கீதத்தை உருவாக்கும் பணியில் விடுதலைப் புலிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
தமிழீழம் எனப்படும் யாழப்பாணம் உள்ளிட்ட இலங்கையின் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் விடுதலைப்புலிகளின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.இங்கு இலங்கை ராணுவத்தால் நுழையக் கூட முடியாத நிலை உள்ளது. இங்கு விடுதலைப் புலிகள் ஒரு அரசுநடத்தும் அளவுக்கு மிகத் திறமையான நிர்வாகத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
தனி ரூபாய் நோட்டு, தனி நீதிமன்றம், காவல் நிலையம், சுங்க வரி வசூல், வங்கிகள் என பக்கா நிர்வாகத்தைமேற்கொண்டுள்ளனர் விடுதலைப் புலிகள்.
இதுதவிர தமிழீழத்திற்கான தேசியக் கொடி, பறவை உள்ளிட்டவையும் உள்ளன. இருப்பினும் தனியாக தேசியகீதம் என்று இதுவரை எதுவும் இல்லை.
அந்தக் குறையையும் தீர்க்கும் பொருட்டு தமிழீழத்திற்கான தேசிய கீதத்தை உருவாக்கும் முயற்சியில் விடுதலைப்புலிகள் இறங்கியுள்ளனர்.
இதுதொடர்பாக விடுதலைப் புலிகளின் தமிழ்நெட் இணைய தளத்தில் ஒரு அறிவிப்பை விடுதலைப் புலிகள்வெளியிட்டுள்ளனர்.
அதில், எங்களது சொந்த தேசிய கீதத்திற்கான கவிதை மற்றும் யோசனைகள், கருத்துக்களை உலகத் தமிழர்கள்அனைவரும் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இதில் பங்கேற்பவர்கள் தேச பக்தியுள்ள தமிழ்க் கவிஞர்களாக இருக்க வேண்டும். சுத்தமான தமிழில் 18 வரிகளில்தேசிய கீதம் அமைந்திருக்க வேண்டும்.
இலங்கை மற்றும் உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் இதற்கான கவிதைகளை எங்களுக்கு அனுப்பி வைக்கலாம்.நவம்பர் மாதம் 27ம் தேதிக்குள் இந்தக் கவிதையை அனுப்பி வைக்கலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications