டெல்லியில் குண்டு வைத்தவர்கள் பாக். தீவிரவாதிகள்
டெல்லி:
டெல்லியில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களை நிகழ்த்தியது நாங்கள் தான் என்று பாக்கிஸ்தான் தீவிரவாதிகள்பொறுப்பேற்றுள்ளனர்.
டெல்லியில் 3 இடங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்புக்கு பாகிஸ்தானில் இருந்து செயல்படும்லஸ்கர்-இ-தொய்பா என்ற தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளதாக தெரிகிறது.இந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் தான் முன்பு பாராளுமன்ற வளாகத்திலும், செங்கோட்டை வளாகத்திற்குள்ளும்புகுந்து தாக்குதல் நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பாகிஸ்தான் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளதாக பாகிஸ்தான்வெளியுறவுத்துறை அலுவலக செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
இந்த சம்பவத்தை கண்டித்துள்ள அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், தீவிரவாதத்தை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளமுடியாது. குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
இதே போல் இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் குண்டு வெடிப்பில் பலியானவர் குடும்பத்துக்கு அனுதாபம்தெரிவித்து பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
டெல்லி குண்டு வெடிப்பில் தொடர்புடைய சதிகாரர்களை நாங்கள் கண்டுபிடித்து விட்டோம், இது தொடர்பாக சிலதகவல்கள் எங்களுக்கு கிடைத்து இருக்கிறது. இதைத் தவிர வேறு எதையும் தற்போதைய நிலையில் சொல்லவிரும்ப வில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
குண்டு வெடிப்பில் பலியானவர்களின் குடுத்துக்கு தலா ரூ. 3 லட்சம் உதவித் தொகை வழங்கப்படும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசு ரூ.2 லட்சமும் டெல்லி மாநில அரசு ரூ. 1 லட்சமும் வழங்குகிறது.
காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications