இன்று தேவர் குருபூஜை: உச்சகட்ட பாதுகாப்பில் பசும்பொன்
பசும்பொன்:
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில்இன்று நடைபெறும் தேவர் குருபூஜை நிகழ்ச்சியில், முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள்,நடிகர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துகிறார்கள்.
இதையொட்டி உச்சகட்ட பாதுகாப்பில் பசும்பொன் கிராமம் கொண்டு வரப்பட்டுள்ளது. மறைந்த தலைவர்பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 98வது பிறந்த நாள் மற்றும் 43வது மறைந்த தினம் இன்றுகுருபூஜையாக அனுசரிக்கப்படுகிறது.இதையடுத்து பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள தேவர் நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள்,முக்குலத்தோர் அமைப்புகளின் தலைவர்கள், தேவர் சமுதாயத்தினர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்திவருகிறார்கள்.
இந்த ஆண்டு புதிதாக பல நடிகர்களும் தேவர் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தவுள்ளனர். புதிதாகஅரசியல் கட்சி ஆரம்பிக்கப் போகும் நடிகர் கார்த்திக்கும் இன்று தேவர் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலிசெலுத்துகிறார்.
தேவர் நினைவிடத்தில் இன்று பிற்பகல் முதல்வர் ஜெயலலிதா அஞ்சலி செலுத்தவுள்ளார். இதற்காக தனிவிமானம் மூலம் மதுரை வரும் ஜெயலலிதா அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பசும்பொன்னுக்கு வருகிறார்.
தேவர் நினைவிடத்தில் அவர் மலரஞ்சலி செலுத்துகிறார். அதன் பின்னர் மீண்டும் மதுரை திரும்பி சென்னைக்குசெல்கிறார்.
ஒவ்வொரு அரசியல் கட்சித் தலைவரும் சுமார் 30 நிமிட நேரம் அஞ்சலி செலுத்த நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.இதேபோல பல்வேறு முக்குலத்தோர் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அமைப்புகளின் தலைவர்களுக்கும்நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
நடிகர்கள் கார்த்திக், விவேக், செந்தில், அருண்பாண்டியன், விஜயகாந்த் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்த நேரம்ஒதுக்கப்பட்டுள்ளது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோரும் அஞ்சலிசெலுத்தவுள்ளனர்.
பசும்பொன் கிராமத்தை நோக்கி வரும் அனைத்து முக்கியச் சாலைகளிலும் போலீஸார் சோதனைச் சாவடிகளைஅமைத்து வாகனங்களை தீவிரமாக சோதனையிட்டு வருகின்றனர்.
குருபூஜையையொட்டி மதுரை நகரில் பல்வேறு அமைப்புகளின் சார்பில் ஊர்வலங்களும் நடைபெறவுள்ளதால்,பசும்பொன், மதுரை மற்றும் தென் மாவட்டங்கள் அனைத்திலும் உச்ச கட்டப் பாதுகாப்புமேற்கொள்ளப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications