புயல்- ஆந்திராவில் ரயில் ஆற்றில் விழுந்து 200 பேர் பலி
ஹைதராபாத்:
ஆந்திராவில் கன மழை காரணமாக அரிக்கப்பட்ட தண்டவாளத்தில் சென்ற ரயில் ஆற்றில் விழுந்தது. இதில் 200 பேர்பலியாயினர்.
தமிழகத்தை மிரட்டிய புயல் நேற்று திசைமாறி ஆந்திராவைத் தாக்கியது. இதனால் அங்கு பெய்து வரும் கன மழையில் பலபகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.நேற்று அதிகாலை நல்கொண்டா மாவட்டம் அருகே செகந்திராபாத்- ரேபள்ளி டெல்டா பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தது.ஒரு ஆற்றுப் பாலத்தை அந்த ரயில் கடந்து கொண்டிருந்தபோது அந்த ரயில் ஆற்றுக்குள் விழுந்தது.
ரயிலின் 10 பெட்டிகள் தடம் புரண்டதில் 5 பெட்டிகள் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. தூங்கிக் கொண்டிருந்தபயணிகள் பெட்டிகளோடு ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். பெட்டிகளில் தூங்கிக் கொண்டு இருந்த 200 க்கும்மேற்பட்டோர் மூழ்கினர்.
இந்த விபத்தில் 200 பேர் பலியாயினர். மழை காரணமாக தண்டவாளம் அடித்துச் செல்லப்பட்டது தெரியாமல் அந்த ரயிலைஅதிகாரிகள் இயங்க அனுமதித்துள்ளனர்.
மேலும் ரெயிலின் கூரை மீது அமர்ந்து பயணம் செய்த பயணிகள் வெள்ளத்தில் சிக்கி தத்தளிக்கின்றனர். அவர்களை படகு, மற்றும்ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்டனர் . மேலும் மீட்புப் பணியில் ராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவ இடத்தை ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார்.
சம்பவம் நடந்த இடத்தை மத்திய ரெயில்வே இணை அமைச்சர் வேலு பார்வையிட்டார். விபத்தில் உயிரிழந்தவரின்குடும்பத்துக்கு ரெயில்வே நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.4 லட்சமும், ரெயில்வே துறை சார்பில் ஒரு லட்சமும் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் ரெயில் விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு ஜனாதிபதி அப்துல்கலாம், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர்அனுதாபம் தெரிவித்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications