சென்னை- ஷார்ஜா விமான சக்கரத்தில் கோளாறு: தப்பிய பயணிகள்
சென்னை:
சென்னையிலிருந்து திருச்சிக்கு கிளம்பிய விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டு தரையிறக்கப்பட்டது. இதனால் தமிழக காங்கிரஸ்தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட 108 பயணிகள் உயிர் தப்பினர்.
சென்னையிலிருந்து திருச்சி, திருவனந்தபுரம் வழியாக ஷார்ஜாவுக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் இயக்கப்படுகிறது. இந்த விமானம்ஞாயிற்றுக்கிழமை காலை 10.25 மணிக்கு திருச்சிக்குக் கிளம்பியது.இதில் ஜி.கே.வாசன் உள்ளிட்ட 108 பேர் பயணித்தனர். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜைக்கு செல்வதற்காக திருச்சியில்இறங்க வாசன் இந்த விமானத்தில் பயணித்தார். விமானம் திருச்சியை நெருங்கியபோது, விமானத்தின் ஒரு சக்கரம் கீழே இறங்கவில்லை.
இதையடுத்து திருச்சி விமான நிலையத்தில் இறங்க முடியாமல் விமானம்தவித்தது. உடனடியாக விமானத்தை சென்னைக்கேக் கொண்டுசெல்ல முடிவு செய்த பைலட் மீண்டும் சென்னைக்குத் திரும்பினார்.
11.25 மணிக்கு மீண்டும் சென்னைக்குத் திரும்பிய விமானம் அங்கு பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது. சக்கரங்கள் ஒருவழியாக கீழேஇறங்கியதால் விமானம் பத்திரமாக விமானம் தரையிறங்கியது.
இதையடுத்தே விமானத்தில் இருந்த பயணிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். பின்னர் மாற்று விமானம் கொண்டு வரப்பட்டு அதில்பயணிகள் ஷார்ஜாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஜி.கே.வாசன் மதுரை செல்லும் விமானத்தில் ஏறி மதுரை சென்று அங்கிருந்து கார் மூலம் பசும்பொன் சென்று தேவர் நினைவிடத்தில்அஞ்சலி செலுத்தினார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications