விமான நிலையத்தை கலங்கடித்த மர்ம பெட்டி
சென்னை:
டெல்லியில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளையடுத்து சென்னை உள்பட தமிழகம் முழுவதுமே தொடர்ந்து பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட நகர்களில் பஸ் நிலையங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.ரயில்களிலும் சோதனைகள் நடத்தப்படுகின்றன. ரயில் பயணிகளின் உடமைகள் சோதனையிடப்படுகின்றன.டெல்லி குண்டுவெடிப்புக்கு லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்புடன் தொடர்புடைய இஸ்லாமிக் இன்குலாபி மகஸ் என்ற அமைப்புபொறுப்பேற்றுள்ளது. 1996ல் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு சமீப காலமாக செயல்படாமல் இருந்தது.
இப்போது இந்தியா-பாகிஸ்தான் இடையே அமைதி நிலவ ஆரம்பித்துள்ள நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலானபேச்சுவார்த்தையை சீர்குலைக்க இத் தாக்குதலை நடத்தியுள்ளது.
மேலும் பல இடங்களில் இந்த அமைப்பு தாக்குதல் நடத்தலாம் என்பதால் அனைத்து மாநில அரசுகளும் பாதுகாப்பை பலப்படுத்துமாறுமத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து தமிழகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் சென்னைக்கு தீவிரவாத மிரட்டல் ஏதும் இல்லை என போலீஸ் கமிஷ்னர் நட்ராஜ் கூறியுள்ளார்.
இந் நிலையில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்நாட்டு விமான நிலையப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் கிடந்தஒரு அட்டைப் பெட்டியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நீண்ட நேரமாக கேட்பாரற்றுக் கிடந்த அந்தப் பெட்டியைப் பார்த்த காவலர்கள்உடனே வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தந்தனர்.
இதனால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து விரைந்து வந்த நிபுணர்கள் அதை அங்கிருந்து அப்புறப்படுத்திசோதனையிட்டனர். ஆரம்பகட்டச் சோதனையில் அதில் வெடிகுண்டு ஏதும் இல்லை என்று தெரியவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து அந்தப் பெட்டி விமான நிலையப் பகுதிக்கு வெளியே கொண்டு செல்லப்பட்டுள்ளது. பாதுகாப்பான முறையில் அந்தப்பெட்டி தீவிரமாக சோதனையிடப்படவுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications