காவிரியில் மீண்டும் வெள்ளப் பெருக்கு அபாயம்
மேட்டூர்:
கர்நாடக காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் மீண்டும் கன மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும்நீரின் அளவு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இதைத் தொடர்ந்து காவிரிக் கரையோரம் உள்ள 11 மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு எச்சரிக்கைவிடப்பட்டுள்ளது.கடந்த சில நாட்களுக்கு முன்பு மேட்டூர் அணைக்கு அபரிமிதமான நீர் வந்து காவிரியில் வெள்ளப் பெருக்குஏற்பட்ட 11 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
பின்னர் அணைக்கு வரும் நீரின் அளவு வெகுவாக குறைந்ததால் வெள்ளம் வடிந்து இயல்பு நிலை திரும்பியது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் அணைக்கு அதிக அளவில் நீர் வரத் தொடங்கியுள்ளது.
கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கன மழை எதிரொலியாக நீர் வரத்து அதிகரித்துள்ளது.ஏற்கனவே அணை நிரம்பி வழிவதால் வருகிற நீர் முழுவதும் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.
கடந்த 17ம் தேதி அணை மூன்றாவது முறையாக நிரம்பியது நினைவிருக்கலாம். இந்த நிலையில் மீண்டும்மேட்டூருக்கு அதிக அளவில் நீர் வந்து கொண்டுள்ளது.
இன்று (புதன்கிழமை) நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 70,000 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.
இதில் 60,000 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. நீர் வரத்து மேலும் உயர்ந்தால் வெள்ளப் பெருக்கு ஏற்படும்அபாயம் உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, காவிரிக் கரையோரம் உள்ள 11 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
காவிரிக் கரையோரங்களில் வசிப்பவர்கள் உஷாராக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications