சுனாமி குடியிருப்பில் தீ: 150 குடிசைகள் சாம்பல்
நாகப்பட்டனம்:
நாகை மாவட்டம் பால் பண்ணைச் சேரி என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்த சுனாமி தற்காலிக குடியிருப்பில்பெரும் தீவிபத்து ஏற்பட்டது.
இதில் 150 வீடுகள் சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் இல்லை.சுனாமியால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானோர், பால்பண்ணைச்சேரி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிககுடியிருப்பில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இங்கு 500க்கு மேற்பட்ட தற்காலிக வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த குடியிருப்பில் செவ்வாய்க்கிழமை காலை பெரும் தீவிபத்து ஏற்பட்டது. தீவிபத்தைத் தொடர்ந்துவீடுகளுக்குள் இருந்தவர்கள் அலறி அடித்து வெளியேறினர்.
குடிசைகளில் இருந்தோரும், தீயணைப்புப் படையினரும் இணைந்து போராடி தீயை அணைத்தனர்.
தீவிபத்து குறித்துத் தகவல் அறிந்த மாவட்ட ஆட்சித் தலைவர் ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்தார்.
தீயணைப்புப் பணிகளை நேரில் இருந்து பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது ஒரு வீட்டிலிருந்து காஸ் சிலிண்டர்வெடித்து பெரும் தீப்பிழம்பு வெளியே வந்து விழுந்தது.
இந்தப் பிழம்பின் ஒரு பகுதி, ராதாகிருஷ்ணன் உடையில் விழுந்து தீப்பிடித்தது. உடனடியாக அருகில்இருந்தவர்கள் ஆட்சித் தலைவர் மீது தண்ணீர் ஊற்றி அவரைக் காப்பாற்றினர்.
இருப்பினும் இதைப் பொருட்படுத்தாத ராதாகிருஷ்ணன் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான பகுதியில்குடியமர்த்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார்.
இந்த தீவிபத்தில் 150 குடிசைகள் சேதமாகி விட்டன. பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் மாற்று குடிசைகள்அமைத்துக் கொடுக்கப்படும் என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications