சென்னையில் தீவிரவாதிகளா? ஆணையர் மறுப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் பிடிபட்ட இரண்டு உத்தரப்பிரதேச மாநில வாலிபர்கள் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள்அல்லர் என்று மாநகர காவல்துறை ஆணையர் நடராஜ் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் பரத்பூரைச் சேர்ந்த ஜூனைத் மற்றும் நூர் சலீம் ஆகிய இருவரும் சென்னைகொருக்குப்பேட்டையில் போலீஸாரிடம் பிடிபட்டனர்.

இருவரும் ஆட்டோ மூலம் கொருக்குப்பேட்டைக்கு வந்தனர். அவர்கள் இருவரும் சுத்தமான உருதுவில்பேசியதால், ஆட்டோ டிரைவருக்கு எதுவும் புரியவில்லை.

அவர்களைப் பார்த்த ஆட்டோக்காரர், தீவிரவாதிகளாக இருப்பார்களோ என்று சந்தேமடைந்தார்.

கொருக்குப்பேட்டையில் அவர்களை இறக்கி விட்ட ஆட்டோக்காரர் அருகில் இருந்த போலீஸாரிடம் இதுகுறித்துதெரிவித்துள்ளார்.

இதையடுத்து இருவரையும் பிடித்து போலீஸார் விசாரித்தனர்.

அப்போது, ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் மாதத்தில், இந்தியா முழுவதும் ஏதாவது ஒரு இடத்திற்குச் சென்றுதொழுகையில் கலந்து கொள்வது வழக்கம்.

அதேபோலத்தான் இந்த ஆண்டு சென்னைக்கு வந்ததாக இருவரும் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் கூறியது உண்மை என்று தெரிய வந்ததைத் தொடர்ந்து போலீஸார் இருவரையும் ஊர் திரும்பஅனுமதித்தனர்.

இத்தகவலை மாநகர காவல்துறை ஆணையர் நடராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+