டெல்லி குண்டு வெடிப்பு: 4 தீவிரவாதிகள் பெங்களூரில் பதுங்கல்
டெல்லி:
டெல்லியில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடைய 4 தீவிரவாதிகள் பெங்களூரில் பதுங்கியுள்ளதாகபோலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
டெல்லி குண்டு வெடிப்பு சம்பவத்தில் 5 தீவிரவாதிகளுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவர்களில்ஒருவன் டெல்லி சரோஜினி நகரில் நடந்த குண்டு வெடிப்பில் பலியாகிவிட்டான்.மற்ற 4 பேர் தப்பி உத்திர பிரதேச மாநித்திற்கு சென்று இருப்பது தெரிய வந்தது. அங்குள்ள சாரன்பூர், மீரட்நகரங்களில் அவர்கள் பதுங்கி இருந்தனர்.
இதையடுத்து அவர்களை பிடிக்க சிறப்பு படை போலீசார் உத்தரபிரதேசத்திற்கு சென்றனர். அதற்குள் அவர்கள்தப்பி ஓடிவிட்டனர்.
தப்பி ஓடிய தீவிரவாதிகள் 4 பேரும் பெங்களூருக்கு சென்று பதுங்கியிருக்கலாம் என்று போலீசார்சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக டெல்லி போலீசாருக்கு சில தகவல்கள் கிடைத்துள்ளன.
இதை அவர்கள் பெங்களூர் போலீசாருக்கு அனுப்பி வைத்துள்ளனர். உடனடியாக பெங்களூர் நகரம் உஷார்படுத்தப்பட்டுள்ளது. உளவுத்துறை போலீஸ் உதவியுடன் பெங்களூரில் தீவிரவாதிகளை தேடும் வேட்டை முடக்கிவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே டெல்லி குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு மூளையாக இருந்து செயல்பட்டவன் பாகிஸ்தான்ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள முசாபராபாத் நகரில் பதுங்கி இருப்பதை போலீசார் கண்டு பிடித்துஉள்ளனர்.
லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த சாலர் என்ற ஹமீத் என்கிற அபக் என்கிற தீவிரவாதிக்கு குண்டுவெடிப்பில் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகமும் ஏற்பட்டு உள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங் டெல்லி குண்டு வெடிப்பு தீவிரவாதிகளை பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளார். இதுதொடர்பாக பாகிஸ்தான் அதிபர் முஷ்ரப்பை அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது டெல்லி குண்டு வெடிப்பில் எந்த ஒரு பாகிஸ்தானியருக்கும் தொடர்பு இருந்தாலோ அல்லதுபாகிஸ்தானில் இருந்து யாரும் ஆதரவு அளித்தாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றுமுஷ்ரப் உறுதி கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications