8ம் தேதி கருணாநிதி கோர்ட்டில் ஆஜர்
சென்னை:
இந்து மதத்தினரின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாக கட்டுரை எழுதியது தொடர்பான வழக்கில் வருகிற8ம் தேதி சென்னை நீதிமன்றத்தில் திமுக தலைவர் கருணாநதி ஆஜராகவுள்ளார் என அக்கட்சி தெரிவித்துள்ளது.
திமுகவின் அதிகாரப்பூர்வ இதழான முரசொலியில், இந்து மதத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாககட்டுரை எழுதியதாக கூறி கருணாநிதி, முரசொலி ஆசிரியர் செல்வம் ஆகியோர் மீது சென்னைசைதாப்பேட்டை17வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் இதுவரை கருணாநிதி நேரில் ஆஜராகாமல் வாய்தா கோரி வந்தார்.தங்கள் மீதான வழக்கை தள்ளுபடி செய்யுமாறு கோரி கருணாநிதியும், முரசொலி செல்வம் தனித்தனியாக மனுதாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு மீது வருகிற 8ம் தேதி உத்தரவு பிறப்பிக்கவிருப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில்,அன்றைய தினம் காலை 11 மணியளவில் கருணாநிதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவார் என திமுகதெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக திமுக தலைமைக் கழகம் விடுத்துள்ள அறிக்கையில், நவம்பர் 27ம் தேதி வரை கருணாநிதிக்குஏராளமான பணிகள் உள்ளன.
இருப்பினும் வருகிற 8ம் தேதி காலை 11 மணியளவில் வழக்கு தொடர்பான விசாரணைக்கு கருணாநிதி ஆஜராவார்என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications