பெண் கவுன்சிலர் மரணம்: கணவரிடம் ரகசிய விசாரணை

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரை பாஜக பெண் கவுன்சிலர் பாண்டீஸ்வரி மர்மமான முறையில் மரணமடைந்தது தொடர்பான வழக்கில்,அவரது கணவர் ரமேஷிடம் ரகசிய இடத்தில் வைத்து போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.

மதுரை மாநகராட்சியின் 28வது வார்டு பாஜக கவுன்சிலரான பாண்டீஸ்வரி, சில நாட்களுக்கு முன்பு நடந்தசாலை விபத்தில் மரணமடைந்தார். அவர் பயணித்த கார் மதுரை மேயர் செ. ராமச்சந்திரனுக்கு சொந்தமானதுஎன்பதால் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.

விசாரணையில் காரை ஓட்டி வந்தது செ. ராமச்சந்திரன் தான் என்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து செ.ராமச்சந்திரன் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இதையடுத்து தலைமறைவான ராமச்சந்திரனை திருச்சியில் வைத்து போலீஸார் கைது செய்தனர்.

இந்த நிலையில் செ. ராமச்சந்திரன் தான் தனது மனைவியைக் கடத்திச் சென்று திட்டமிட்டுக் கொலைசெய்துள்ளதாக பாண்டீஸ்வரியின் கணவர் ரமேஷ் குற்றம் சாட்டியிருந்தார்.

இதையடுத்து அவரை விசாரிக்க போலீஸார் முடிவு செய்தனர். ஆனால் அவரை தேடி போலீஸார் சென்ற போதுரமேஷ் அவரது வீட்டில் இல்லை. இதனால் போலீஸாருக்கு ரமேஷ் மீது சந்தேகம் ஏற்பட்டது.

அவரை தீவிரமாக தேடினர். இதை அறிந்த ரமேஷ், தனது வழக்கறிஞருடன் மாவட்ட காவல்துறைக்கண்காணிப்பாளர் சுந்தரேசனை சந்தித்தார். அவரிடம் விசாரணை நடத்துமாறு எஸ்.பி. உத்தரவிட்டார்.

இதையடுத்து வழக்கறிஞர் முன்னிலையில் ரகசிய இடத்தில் வைத்து ரமேஷிடம் போலீஸார் விசாரணைநடத்தினர். இந்த விசாரணையின் போது பல திடுக்கிடும் தகவல்களை ரமேஷ் கூறியதாக தெரிகிறது.

இந்த நிலையில், மேயர் ராமச்சந்திரனின் கையில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை அளிக்க அனுமதிக்குமாறு கோரிமதுரை போலீஸார் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர்.

ஆனால் தனக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை, எனவே வெளியில் அனுப்பத் தேவையில்லை என்று ராமச்சந்திரன்கூறியுள்ளார். இந்த மனு மீதான உத்தரவை இன்று மதுரை 2வது குற்றவியல் நீதிபதி ராஜேஷ் கண்ணன்பிறப்பிக்கவுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+