மேட்டூர்: நீர் திறப்பு அதிகரிப்பு - வெள்ள அபாயம் நீடிப்பு
மேட்டூர்:
மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அதிகரித்துள்ளனர்.இதனால் காவிரியில் நிலவும் வெள்ள அபாயம் தொடர்ந்து நீடிக்கிறது.
கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர்அணைக்கு நீர் வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.இதையடுத்து அணையின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.இதையடுத்து காவிரிக் கரையோரம் உள்ள 11 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
2 நாட்களாக விநாடிக்கு 74,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வந்தது. இது இன்று காலையில் அதிகரிக்கப்பட்டுவிநாடிக்கு 83,000 கன அடி நீர் தற்போது திறந்து விடப்படுகிறது. இதன் காரணமாக காவிரியில் வெள்ளம்கரைபுரண்டோடுகிறது. காவிரிக் கரையோர மாவட்டங்களில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது.
இன்று காலை 11 மணி நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 75,000 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையின்நீர் இருப்பு 120.24 அடியாக உள்ளது.
தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், காவிரிக் கரையோர ஊர்களில் உஷார்நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications