நக்சலைட்டுகள் தலைக்கு ரூ.10 கோடி பரிசு: ஆந்திர அரசு
நகரி:
நக்சலைட்டு தீவிரவாதிகளின் தலைக்கு ஆந்திர அரசு ரூ. 10 கோடி பரிசுப் பணம் அறிவித்துள்ளது.
ஆந்திராவில் மாவோயிஸ்ட் நக்சலைட்டு தீவிரவாதிகள் அப்பாவி மக்களை மிரட்டி வசூல் வேட்டை நடத்திவருகிறார்கள். பணம் கொடுக்காதவர்களை ஈவு இரக்கமின்றி கொன்று விடுகிறார்கள்.போலீஸ் நிலயங்கள் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தி வருகிறார்கள். முக்கிய அரசியல் தலைவர்களைகொல்லவும் திட்டம் தீட்டி வருகிறார்கள்.
இதனால் ஆந்திராவில் நக்சலைட்டுகளின் அட்டூழியத்தை அடியோடு ஒழிக்க முதல்-அமைச்சர் ராஜசேகர ரெட்டிமுடிவு செய்துள்ளார். இது பற்றி உள்துறை அமைச்சர் ஜனாரெட்டியுடன் ஆலோசனை நடத்தினார்.
அதில் எடுக்கப்பட்ட முடிவு பற்றி அறிக்கை கூறுவதாவது:
சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நக்சலைட்டு தீவிரவாதிகளை கூண்டோடு பிடிக்க தேடுதல் வேட்டைதீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நக்சலைட்டுகள் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும்.
மாவோயிஸ்ட் நக்சலைட்டு இயக்கத்தின் மத்திய கமிட்டி முதன்மை செயலாளர்கள் கணபதி, அகிராஜூ, ராமகிருஷ்ணா உள்பட 13 பேரின் தலைக்கு தலா ரூ. 2 கோடி பரிசு வழங்கப்படும்.
நக்சலைட்டுகளின் மாநில தலைவர்கள் சுதாகர் ரெட்டி, அப்பாராவ் உள்பட 7 பேரின் தலைக்கு தலா ரூ.10 லட்சம்பரிசு வழங்கப்படும்.
இதற்கு அடுத்தபடியாக நக்சலைட்டுகளின் பதவிகளுக்கு ஏற்ப பரிசுத் தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இதற்காக மொத்தம் ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆகவே நக்சலைட்டுகளின் நடமாட்டம் பற்றியோ, அவர்கள் தங்கியுள்ள பகுதி பற்றியோ தகவல்கொடுப்பவர்களுக்கு இந்த பரிசுத் தொகை வழங்கப்படும். தகவல் கொடுப்பவர்களின் பெயர் ரகசியமாகவைக்கப்படும் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications