ரம்ஜான்: ஜெயலலிதா வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ரம்ஜான் பண்டிகையையொட்டி முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்த்து செய்தி வெளியிட்டு உள்ளார்.
அதில் அவர் கூறியிப்பதாவது:ஈத் திருநாளை இன்புறக் கொண்டாடி மகிழும் எனது அன்பிற்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும்என் இதயம் கனிந்த ஈத் பெருநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இறைவன் அருளைப் பெறுவதற்காக ரம்லான் என்னும் புனித மாதத்தில் நோன்பிருந்து உடலையும்,உள்ளத்தையும் தூய்மைப்படுத்தி இறையருளால் பெற்ற பொருளின் ஒரு பங்கை ஏழையருக்கு ஈந்து, இறைநினைவுடன் இருப்பர் இஸ்லாமியப் பெருமக்கள்.
இந்த இனிய நாளில் இறையருளால் உலகம் எங்கும் அமைதி நிலைக்கவும், அன்பு தழைக்கவும், இஸ்லாமியப்பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் எனது உளமார்ந்த ஈத் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications