விரைவில் விஜயகாந்த்தின் கிராம வலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Vijaykanth

தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியைத் தொடங்கியுள்ள நடிகர் விஜயகாந்த் விரைவில் தமிழகம்முழுவதும் உள்ள பட்டிதொட்டியெங்கும் சுற்றுப்பயணம் செய்து தனது கட்சிக்கு ஆதரவு திரட்டவுள்ளார்.

கடந்த செப்டம்பர் 14ம் தேதி மதுரையில் நடந்த பிரமாண்ட மாநாட்டில் தனது புதிய கட்சியைத் தொடங்கியவிஜயகாந்த், தமிழகம் முழுவதும் கிராமம் கிராமமாக சென்று சுற்றுப்பயணம் செய்யவிருப்பதாகதெரிவித்திருந்தார்.

அதன்படி அவரது கிராம வலம் குறித்த திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு விஜயகாந்த்தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார்.

இந்த மாத கடைசியில் அவரது கிராம வலம் தொடங்கும் எனத் தெரிகிறது. எம்.ஜி.ஆர் பயன்படுத்திய பிரசாரவேன் மூலம் அவர் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார்.

தமிழகத்தில் மொத்தம் 234 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதிகள் அனைத்திலும் சுற்றுப்பயணம்செய்து கட்சிக்கு ஆதரவு திரட்ட விஜயகாந்த் முடிவு செய்துள்ளார்.

எம்.ஜி.ஆர். ரசிகர்களையும், கிராமத்துப் பெண்களையும் கவரும் வகையில் விஜயகாந்த்தின் பிரசாரம் அமையும்எனத் தெரிகிறது.

இதுவரை எந்த அரசியல்வாதியும் செய்திராத அளவுக்கு, பட்டிதொட்டியெங்கும் சென்று பொதுக்கூட்டங்களில்பேசி, கட்சிக் கொடியை ஏற்றி வைத்து தனது கட்சியை பிரபலப்படுத்த விஜயகாந்த் தீவிரமாக உள்ளார்.

சுற்றுப்பயணத்தை முடிப்பதற்கும், சட்டசபைத் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாவதற்கும் சரியாக இருக்கும்என விஜயகாந்த் எண்ணுகிறார்.

சுற்றுப்பயணத்தின் இறுதியில் தேர்தலில் போட்டியிடுவது குறித்தும், கூட்டணி, வேட்பாளர்கள் குறித்தும்விஜயகாந்த் முக்கிய அறிவிப்பை வெளியிடக் கூடும் எனத் தெரிகிறது.

இதற்கிடையே, தமிழகத்தில் மொத்தம் உள்ள 30 மாவட்டங்களில் 21 மாவட்டங்களுக்கான கட்சி நிர்வாகிகளைவிஜயகாந்த் தேர்வு செய்து விட்டார். மற்ற மாவட்ட நிர்வாகிகளையும் தேர்வு செய்தவுடன் ஒட்டு மொத்தநிர்வாகிகள் பட்டியலும் வெளியிடப்படும் என கட்சியின் பொதுச் செயலாளர் ராமு வசந்தன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+