ரெயில் நிலையத்தில் பீதியை ஏற்படுத்திய வாலிபர்கள்
சென்னை:
சென்னையிலிருந்து கோவை கிளம்பிய கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீவிரவாதிகள் பயணம் செய்வதாக வந்ததகவலையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்திலிருந்து இன்று காலை 6.15 மணிக்கு கோவை எக்ஸ்பிரஸ் ரெயில்புறப்பட்டது. ரெயில் கிளம்பியபோது, ரிசர்வ் செய்யப்படாத பெட்டியில் 2 பேர் கையில் சூட்கேஸுடன் ஓடி வந்துஏறினர்.ஏற்கனவே ரெயிலில் அமர்ந்திருந்த ஒருவருடன் அவர்கள் பரபரப்பாக பேசிக் கொண்டனர். 3 பேரும்தாடியுடனும், வித்தியாசமாகவும் பேசிக் கொண்டதால் பயணிகளிடையே பீதி ஏற்பட்டது. அவர்கள்தீவிரவாதிகளாக இருப்பார்களோ என்ற சந்தேகமடைந்த பயணிகள், அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்துரெயிலை நிறுத்தினர்.
இதையடுத்து டி.டி.ஆர். மற்றும் ரெயில் நிலைய போலீஸார் அங்கு வந்தனர். அவர்களிடம், சம்பந்தப்பட்ட 3பயணிகள் குறித்து மற்ற பயணிகள் கூறினர். இதையடுத்து 3 பேரையும் போலீஸார் ரெயில் நிலைய காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, 3 பேரில் மது, ரதீஷ் ஆகிய இருவரும் கேரள மாநிலம்எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது. 3வது நபரின் பெயர் மகந்தா. இவர் அசாம் மாநிலத்தைச்சேர்ந்தவர்.
கேரள வாலிபர்கள் இருவரும் குஜராத் மாநிலத்தில் வெல்டர்களாக பணியாற்றி வருகிறார்கள். நவஜீவன்எக்ஸ்பிரஸ் மூலம் இன்று காலை சென்னை வந்த அவர்கள் கேரளா செல்வதற்காக கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில்கடைசி நிமிடத்தில் ஓடி வந்து ஏறியுள்ளனர்.
இருவரும் கூறிய தகவல்கள், அவர்கள் கொடுத்த கவர்கள் குறித்து கேரள போலீஸாரிடம் சென்னை போலீஸார்விசாரிக்கும் படி கூறியுள்ளனர். மகந்தா மன நலை சரியில்லாதவர் என்று தெரிகிறது.
மூன்று பேரும் வைத்திருந்த சூட்கேஸில் சந்தேகத்திற்கிடமான பொருள் எதுவும் இல்லை என்று போலீஸார்தெரிவித்துள்ளனர்.
கேரள வாலிபர்கள் கூறிய தகவல்கள் உண்மையானது என்றால் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications