தீவிரவாதிகள் ஊடுறுவல் இல்லை: சென்னை கமிஷனர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மாநகரில் தீவிரவாதிகள் ஊடுறுவல் இல்லை. இருப்பினும் தீபாவளிக்காக போடப்பட்ட கூடுதல்பாதுகாப்பு தொடர்ந்து நீடிக்கும் என மாநகர காவல்துறை ஆணையர் நடராஜ் தெரிவித்துள்ளார்.சென்னையில் அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், சென்னை நகரில் தீவிரவாதிகள் ஊடுறுவல் எதுவும்இல்லை. போலீஸார் தொடர்ந்து தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தீபாவளிப் பண்டிகையையொட்டி போடப்பட்ட கூடுதல் பாதுகாப்பு தொடர்ந்து நீடிக்கும். பஸ் நிலையம், ரெயில்நிலையங்கள், முக்கிய இடங்களில் போலீஸார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபடுவர்.
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் சீருடை இல்லாத போலீஸாரும், சிறப்புப் போலீஸ் படையினரும்கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படுவர் என்றார் நடராஜ்.












Click it and Unblock the Notifications