மனைகளுக்கு அங்கீகாரம்: தமிழக அரசு விரைவில் அறிவிப்பு
சென்னை:
தேர்தல் நெருங்குவதால் தினந்தோறும் ஒரு அறிவிப்பை வெளியிட்டு, எதிர்க் கட்சிகளின் வயிற்றில் புளியைகரைத்துக் கொண்டிருக்கிறது அதிமுக அரசு.
நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத பிரச்னைகளுக்கு எல்லாம் இதன் மூலம் விடிவு காலம் பிறந்திருக்கிறது.அந்த வரிசையில் அடுத்ததாக ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார் முதல்வர்ஜெயலலிதா.
தமிழகம் முழுவதும் அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகள் ஏராளம் உள்ளன. இவற்றில் குடியிருக்கும் மக்களும்லட்சக்கணக்கில் உள்ளனர்.
இவர்களுக்கு எல்லாம் "வீட்டுமனை அங்கீகாரம் என்பது தான் பெரும் பிரச்னை. அங்கீகாரம் கிடைத்தால் தான்அவர்கள் குடியிருக்கும் ஏரியாவுக்குள் சாலை, குடிநீர், சாக்கடை வசதிகள் எல்லாம் உள்ளே நுழையும்.
இதனால் இவர்கள் நீண்ட காலமாக அங்கீகாரத்திற்காக போராடி வருகின்றனர். ஏரிப் புறம்போக்கு, ஆக்கிரமிப்புபகுதி என்று பல்வேறு காரணங்களை காட்டி, இத்தகைய நிலங்களுக்கு அங்கீகாரம் அளிக்க அரசு நிர்வாகஅமைப்புகள் மறுத்து வருகின்றன.
இந்நிலையில் ஆளும் அதிமுக அரசின் புண்ணியத்தால், அங்கீரிக்கப்படாத வீட்டுமனைகளில் குடியிருக்கும்மக்களுக்கு விரைவில் இனிப்பான செய்தி கிடைக்க உள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட வீட்டுமனைகளுக்கு தான் அரசின் சலுகைகள் என்ற விதிமுறையை தளர்த்தி, அங்கீரிக்கப்படாதவீட்டுமனைகளுக்கும் அனைத்து வசதிகளையும் செய்து தர தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது.
இதற்கான அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா விரைவில் வெளியிட உள்ளார். அதற்கான கோப்புகள் தயாராகஉள்ளன.
இந்த கோப்பில் முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டதும், அங்கீகரிக்கப்படாத மனைகளில் வசிப்பவர்கள்காட்டில் சலுகை மழை பெய்யும்.


Click it and Unblock the Notifications
