வெள்ள நிவாரண கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி
சென்னை:
சென்னையில் வெள்ள நிவாரண கூட்ட நெரிசலில் சிக்கி 6 பெண்கள் பலியாயினர்.
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன் படிபாதிப்பு ஏற்பட்ட பகுதிகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.வியாசார்பாடி பகுதி மக்களுக்கு அங்குள்ள அம்பேத்கர் கல்லூரியில் வைத்து நிவாரண பொருட்கள்வழங்கினார்கள். இதை அந்த பகுதியை சேர்ந்த சாஸ்த்திரி நகர், சத்தியமூர்த்தி நகர், சர்மா நகர், இந்திராகாந்திநகர், கக்கன்ஜி காலனி மக்கள் பல்லாயிரக் கணக்கோர் வந்து பெற்று சென்றனர்.
இதனால் இங்கு கூட்டம் அதிகமாக இருந்தது. நேற்று இரவு 10 மணிக்கு நிவாரணம் வழங்கும் பணிநிறுத்தப்பட்டது. இதனால் இன்று காலை முதல் ஆளாக நிவாரண பொட்கள் வாங்கி விட கூட்டம் அலை மோதியது.
சிலபேர் வீட்டுக்கு கூட செல்லாமல் அங்கேயே காத்துகிடந்தனர். இதனால் இங்கு ஆண்களும் பெண்களும்முண்டியடித்துக் கொண்டு ஓடிய போது ஒருவர் மீது ஒருவர் இடித்து கிழே விழுந்தனர். அவர்கள் மீது இடறிமற்றவர்களும் விழுந்தனர்.
கீழே விழுந்தவர்களை கண்டு கொள்ளாமல் மிதித்து கொண்டு ஓடினார்கள். இந்த நெரிசலில் மிதிபட்டும்ஆங்காங்கே குட்டைகளில் தேங்கியுள்ள தண்ணீரில் விழுந்து மூழ்கியும் 6 பெண்கள் சம்பவயிடத்திலேயேஉயிரிழந்தனர்.
20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இறந்த 6 பேரில் 4 பெண்கள் அடையாளம் காணப்பட்டது. அவர்கள்குஞ்சம்மாள் (வயது 65), கணவர் வட்டப்பன், சித்தம்மாள் (வயது 55) கணவர் குப்பையன்.
இவர்கள் 2 பேரும் வியாசார்பாடி சாஸ்த்திரி நகர் 6வது தெருவைச் சேர்ந்தவர்கள். மேலும் சுப்பம்மாள் (வயது 54)கணவர் பெயர் ஆதிமூலம் வியாசார்பாடி, பி.வி. காலனி 28வது தெருவை சேர்ந்தவர்.
மகாகவி பாரதிநகர், ராஜீவ்காந்தி மேற்கு குறுக்கு தெருவைச் சேர்ந்த ஜெய்மாலனி (வயது 22) அம்மா பெயர்ஆமினாபீவி ஆகியோர் ஆவர்.
மற்ற 2 பெண்கள் விவரம் உடனடியாக தெரியவில்லை. இறந்தவர்கள், காயமடைந்தவர்கள் அனைவரும்ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இறந்தவர்களின் உறவினர்களும், காயமடைந்தவர்களின் உறவினர்களும் ஸ்டான்லி மருத்துவமனையில் கும்பல்கும்பலாக நின்று கதறி அழுத வண்ணம் உள்ளனர்.
சம்பவயிடத்தில் பதட்டம் நிலவுவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
போலீஸ் கமிஷனர் நடராஜ், இணை கமிஷனர்கள் சாஸ்திரி, மாகாளி, துணை கமிஷனகள் சண்முகராஜஷ்வரன்,சம்பத்குமார், மாசான முத்து உள்பட ஏராளமான உயர் அதிகாரிகள் அங்கு நின்று தேவையான பாதுகாப்புநடவடிக்கைகளை கவனித்து வருகிறார்கள்.
இதனால் அம்பேத்கார் கல்லூரி வளாகத்தில் வழங்கப்பட்ட நிவாரண உதவிகள் இன்று நிறுத்தப்பட்டு விட்டது.












Click it and Unblock the Notifications