சேலத்தில் கல்வி நிறுவனம் முற்றுகை
சேலம்:
சேலத்தில் மோசடி செய்ததாக கூறி இந்திய அரசு சிறு தொழில் கல்வி நிறுவனம் என்ற கேட்டரிங் மற்றும் ஓட்டல்மேனேஜ்மென்ட், பேஷன் டிசைனிங் நிறுவனத்தின் முன்பு முற்றுகை போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டனர்.
சேலம் 5 ரோடு காந்தி நகரில் இயங்கிவரும் இந்த நிறுவனத்தில் 100 மாணவிகள் உள்பட 300 பேர் பயின்றுவருகிறார்கள். கடந்த 2002ம் ஆண்டு இந்த கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது.இந்த நிறுவனத்தின் முதல்வராக நாமக்கல்லை சேர்ந்த டி.ராம்குமார் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் இந்த கல்வி நிறுவனம் முறையான அங்கீகாரம் எதுவும் பெறவில்லை என்றும், லட்சக்கணக்கில்மாணவர்களிடம் பணம் வசூல் செய்துள்ளனர் என்றும் புகார் எழுந்துள்ளது.
இதனால் முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு கேட்டரிங், ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிக்கும் மாணவர்கள்இன்று வகுப்புகளை புறக்கணித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்த மாணவர்களின் பெற்றோர்களும் கல்வி நிறுவனத்திற்கு படையெடுத்தனர்.
எஸ்.எஸ்.ஐ என்கிற பெயரில் மத்திய அரசின் அங்கீகாரம் பெற்றதாக 1 வருடம் 2 வருடம் கேட்டரிங், ஹோட்டல்மேலாண்மை பயிற்சி அளிப்பதாக கூறி ரூ.1,25,000 கட்டணம் வசூல் செய்கிறார்கள்.
ஆனால் கட்டணத்திற்கான ரசீதுகளில் அங்கீகார எண் குறிப்பிடப்படவில்லை. மேலும் 300 மாணவர்களுக்குபயிற்சி அளிக்க 2 ஆசிரியர்கள் தான் உள்ளனர்.
வினாத்தாள்கள் ஜெராக்ஸ் எடுத்து தான் கொடுகின்றனர். இதனால் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம் என்றுமாணவர் தரப்பில் சொல்கின்றனர்.
இது குறித்து கலெக்டர் விசாரணை நடத்தி எங்கள் எதிர்காலத்திற்கு விடையளிக்க வேண்டும் என்றனர்.
மாணவர்களின் இந்த புகாரை மறுத்துள்ள கல்லூரி முதல்வர் ராம் குமார்
எங்களை போன்ற கல்வி நிறுவனங்கள் தமிழகத்தில் 16 இடங்களில் செயல்பட்டு வருகிறது. சேலத்தில் எங்கள்நிறுவனம் 6வது அனுமதி பெற்ற கிளை ஆகும். எங்கள் நிர்வாக இயக்குனர் அப்பல்லோ ஏஜென்ஸி என்ற பெயரில்இதை நடத்துகிறார்.
மாணவர்கள் சந்தேகத்தை போக்க கிண்டியில் இருந்து எஸ்.எஸ்.ஐ நிறுவனத்தின் உதவி இயக்குனர் ஆர்.விசுவநாதன் கையெழுத்திட்டு அனுப்பிய 16 கல்வி நிறுவனங்களின் பட்டியலை பேக்ஸ் மூலம் பெற்று இப்போதுஒட்டி உள்ளோம்.
மாணவர்கள் அதைப் பார்த்து புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications