தண்ணீரில் தத்தளிக்கும் சென்னை: அம்பத்தூர் ஏரி உடைந்தது
சென்னை:
![]() |
சென்னை நகரில் இன்றும் விட்டு விட்டு பலத்த மழை பெய்து வருகிறது.
தொடரும் மழை காரணமாக வட சென்னையில் மணலி உள்ளிட்ட பகுதிகளும் தென் சென்னையில் மடிப்பாக்கம், வேளச்சேரிஆகிய பகுதிகளும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் கடல் போல்தேங்கியுள்ளது.
இப் பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வேறு இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். மடிப்பாக்கத்தில் ராம்நகர் பகுதிதான் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இங்கு பல வீடுகள் நீரில் மூழ்கிவிட்டன. இதனால் கீழ்த்தளத்தை மட்டுமே கொண்ட வீடுகளில் வசிப்பவர்கள் வேறு பகுதிகளுக்குஅப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். மேல் மாடிகளில் இருப்பவர்களால் கீழே வர முடியாததால், அவர்களையும் தீயணைப்புப்படையினர் மீட்டு அப்புறப்படுத்துகின்றனர்.
பல வீடுகளில் வசிப்பவர்கள், திருடர் பயம் காரணமாக வீடுகளை விட்டு வெளியே வர மறுத்து மாடிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.இதே நிலைதான் வேளச்சேரியிலும் காணப்படுகிறது.
வேளச்சேரியில் கிட்டத்தட்ட 18 தெருக்களை தண்ணீர் சூழ்ந்து தீவுகளாக மாற்றியுள்ளது. இங்குள்ள மக்களையும் தீயணைப்புப்படையினர் மீட்டு வருகின்றனர். பெருங்குடி, கண்ணகி நகர், ஒக்கியம் துரைப்பாக்கம், சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள தற்காலிக குடியிருப்புகள் ஆகிய பகுதிகளிலும் கடல் போல தண்ணீர் சூழ்ந்துள்ளது.
வட சென்னையில் ஓட்டேரி, புளியந்தோப்பு, வியாசர்பாடி, மகாகவிபாரதி நகர், எருக்கஞ்சேரி, வண்ணாரப்பேட்டை,தண்டையார் பேட்டை, கொருக்குப்பேட்டை, ராயபுரம், பெரம்பூர், சூளை, திருவிக நகர், யானைகவுனி, வேப்பேரி,புதுப்பேட்டை, தங்கசாலை, எண்ணூர், திருவொற்றியூர் மற்றும் மணலி ஆகிய பகுதிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
![]() |
இந்தப் பகுதிகளில் லட்சக்கணக்கான வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் இருக்க இடமும் உண்ண உணவும் இல்லாமல்பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நிவாரணப் பணிகளில் தமிழக அரசு மெத்தனமாக உள்ளதால் பாதிப்பு மேலும் கடுமையாக உள்ளது.
இந்த நிலையில் அராபாத் ஏரியையொட்டியுள்ள 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட அம்பத்தூர் ஏரி கடந்த ஆண்டு பொதுப்பணித்துறையினரிடம் இருந்து பராபரிப்பு பொறுப்பை அம்பத்தூர் நகரசபை ஏற்றுக் கொண்டது. இநத் ஏரிக்குள் 3,000 வீடுகள்உள்ளன.
இந்த அம்பத்தூர் ஏரியின் மற்றொரு பகுதியான கலங்கல் பகுதியில் கரை உடைந்ததை தொடர்ந்து ஏரி நீர் அம்பத்தூர் நகருக்குள்புகுந்தது.
டீச்சர்ஸ் காலனி, சிவானந்தா நகர், அன்னை சத்யா நகர், பாரதி நகர், பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
வெள்ளத்தை வெளியேற்றும் பணியில் அம்பத்தூர் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அம்பத்தூர் நகரசபை தலைவர்,தாசில்தார் ஆகியோர் பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.
இருந்தாலும் அம்பத்தூர் ஏரி வெள்ள நீரி கரைளை உடைத்துக் கொண்டு வெளியேறிய வண்ணம் இருக்கிறது. ஏரி உடைப்பைசரி செய்யும் பணி நடந்து வருகிறது.
மணலி பகுதியில் ஆமுல்லைவாயல், வைகாடு உள்ளிட்ட கிராமப் பகுதிகளை நீர் முழுமையாக சூழ்ந்துவிட்டது. இதனால் அப்பகுதி மக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். சென்னையில் இருந்து இந்த இரு பகுதிகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.
திருப்போரூரில் தண்டலம் ஏரி உடைந்ததால் மாமல்லபுரம் சாலையில் 500 அடி சாலை நீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால்சென்னை-கல்பாக்கம், மகாபலிபுரம் இடையிலான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் கிழக்குக் கடற்கரைச் சாலைவழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. இங்கு மேலும் 6 ஏரிகளும் உடையும் நிலையில் உள்ளன.
![]() |
குடிநீர் ஏரிகள் நிரம்புகின்றன
இதே போல சென்னை நகருக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகள் பல ஆண்டுகளுக்குப் பின்னர் நரம்பி வருகின்றன. சோழவரம் ஏரி நிரம்பிவிட்டது.
சென்னை மாநகரைச் சுற்றிலும் உள்ள சோழவரம், பூண்டி, புழல், செம்பரம்பாக்கம்,செங்குன்றம் ஆகிய இடங்களில் உள்ள ஏரிகளிலிருந்துதான் குடிநீர்தேவை பெருமளவில் பூர்த்தியாகிறது. இங்கு பல ஆண்டுகளாக தண்ணீர் போதிய அளவில் இல்லாததால் சமீபத்தில் வீராணம் ஏரியிலிருந்தும் நீர் கொண்டுவரப்படுகிறது.
இந் நிலையில் கடந்த 2 வாரங்களாக பெய்து வரும் கன மழை காரணமாக இந்த ஏரிகளுக்கு நல்ல நீர் வரத்து உள்ளது. இதில் கிட்டத்தட்ட 7ஆண்டுகளுக்குப் பிறகு சோழவரம் ஏரி நிரம்பியுள்ளது. சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 881 மில்லியன் கன அடியாகும்.
ஏரிக்கு தொடரந்து நீர் வந்து கொண்டிருப்பதால் அது உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த ஏரிக்கு நீர் புழல் ஏரிக்குத் திருப்பிவிடப்பட்டுள்ளது.
இதேபோல புழல் ஏரிக்கும் நல்ல நீர் வரத்து உள்ளது. இங்கு வினாடிக்கு 2750 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. இதன் கொள்ளளவு 3,300 மில்லியன் கனஅடியாகும். தற்போது ஏரியில் 1,953 மில்லியன் கன அடி நீர் உள்ளது.
அதே போல பூண்டி நீர்த்தேக்கத்திற்கும் அதிக அளவில் நீர் இருப்பு உள்ளது. ஏற்கனவே ஆந்திராவிலிருந்து வரும் கிருஷ்ணா நீரால் பூண்டி நீர்த்தேக்கத்தில் நீர்இருப்பு இருந்து வருகிறது. மழை நீரும் தற்போது சேர்ந்துள்ளதால் அணைக்கு வரும் நீரின் அளவுக்கு இரட்டிப்பாகியுள்ளது.
![]() |
செம்பரம்பாக்கம், செங்குன்றம் ஆகிய ஏரிகளுக்கும் நீர் வரத்து அதிகமாக உள்ளது. தற்போது உள்ள நீரை வைத்து 2 ஆண்டுகளுக்கு குடிநீர்ப்பிரச்சினையை சமாளிக்க முடியும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மதுரை பஸ்கள் காலதாமதம்
சென்னை அரும்பாக்கம், கத்திப்பாரா சந்திப்பு ஆகிய பகுதிகளில் இடுப்பளவுக்கு தண்ணீர் நிற்பதால் அங்கு கடுமையாகபோக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே சென்னை கோயம்பேடிலிருந்து வெளியூர் செல்லும் பேருந்துகளும், வெளியூரிலிருந்து சென்னை வரும் பஸ்களும்வருவதற்கும், சேர்வதற்கும் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து மதுரைக்கு சென்று சேரும் பஸ்கள் சுமார் 3 மணி நேரம் காலதாமதமாக செல்கின்றன.
137 பேர் பலி:
இந் நிலையில் தமிழகத்தில் கன மழை, வெள்ளத்துக்கு இதுவரை 137 பேர் பலியாகியுள்ளனர்.
















Click it and Unblock the Notifications