சென்னை மாநகராட்சியின் லேட் பிக்கப்!
சென்னை:
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தாமதத்துக்குப் பின் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உணவுப் பொருள்,மறுவாழ்வுப் பொருட்களை வழங்கி வருகின்றனர்.
தொடர் கன மழை காரணமாக கடுமையாக பாதிப்படைந்துள்ள சென்னை மாநகரின் பல பகுதிகள் தொடர்ந்து வெள்ளத்தில்மிதக்கின்றன. கடந்த வாரம் பெய்த கன மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகள் வெள்ளமீட்பு மற்றும் மறு வாழ்வுப் பணிகளில் மெத்தனமாக இருந்தனர்.இந்த நிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்கள், இருப்பிடம் கிடைப்பதில் பெரும் குழப்பம்,தாமதம் ஏற்பட்டு பெரும் சிக்கலுக்கு ஆளாகினர். மாநகராட்சியின் இந்த தாமதப் போக்கினால் ஆவேசமடைந்த மக்கள் பலஇடங்களில் சாலை மறியல், முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை மாநகராட்சி மேயர் பொறுப்பில் இல்லாததாலும் துணை மேயர் தலைமறைவாக இருப்பதாலும் தலையில்லா முண்டமாகஇருக்கிறது மாநகராட்சி நிர்வாகம். மாநகராட்சி ஆணையர் விஜய்குமார் தான் மீட்பு மற்றும் மறுவாழ்வுப் பணிகளை நேரடியாககவனித்து வருகிறார்.
இந் நிலையில் கடந்த முறை ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு உடனடியாக ரியாக்ஷன் கொடுக்கத் தவறியதால் கடும் கண்டனத்திற்குஆளானது மாநகராட்சி நிர்வாகம். ஆனால், இந்தமுறை ஓரளவுக்கு சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறது.
மாநகராட்சிக்குட்பட்ட பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்கப்பட்ட மக்களுக்கு நேற்று ஒரு நாள் மட்டும் 5 லட்சம் பேருக்கு உணவுசமைத்துத் தரப்பட்டது. மாநகராட்சிப் பள்ளிகளில் மீட்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்று 3 லட்சம் பேருக்குஉணவு வழங்கப்பட்டுள்ளது.
இதுதவிர நீண்ட நாட்களாக தண்ணீர் தேங்கிக் கிடக்கும் புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் நோய் பரவாமல் தடுக்க சிறப்புமருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு வயிற்றுப் போக்கு தடுப்பு மருந்துகள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.
தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் கொசுக்கள் குவிவதைத் தடுக்க மருந்து அடிக்கப்படுகிறது. குளோரின் மாத்திரைகளும்வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர 15 நடமாடும் மருத்துவ முகாம்களும் செயல்படத் தொடங்கியுள்ளன.
சுரங்கப் பாதைகள் உள்ளிட்ட தண்ணீர் தேங்கிக் கிடக்கும் பகுதிகளில் மோட்டார் பம்புகளை வைத்து தண்ணீர்வெளியேற்றப்பட்டு வருகிறது. மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் கட்டடத்தில் 24 மணி நேரமும் இயங்கும்வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் ஆவேசத்தைத் தொடர்ந்து மீட்பு மற்றம் நிவாரணப் பணிகளில் மாநகராட்சி அதிகாரிகளை முடுக்கி விடஅமைச்சர்கள் பொன்னையன், ஜெயக்குமார் ஆகியோரை முதல்வர் ஜெயலலிதா களத்தில் இறக்கி விட்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications