ஒரே நேரத்தில் 2 புயல் சின்னங்கள்: பெரும் பீதியில் தமிழகம்!!
சென்னை:
![]() |
வங்கக் கடலில் ஏற்கனவே ஒரு புயல் சின்னம் (குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை), இருந்த இடத்தை விட்டுஅசையாமல் கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தை வெள்ளக் காடாக்கிக் கொண்டுள்ள நிலையில் இன்னொருகுறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வட தமிழகத்தையும், பாண்டிச்சேரியையும் பெரும்மிரட்டலுக்குள்ளாக்கியுள்ளது.
வங்கக் கடலில் ஏற்கனவே உருவாகியிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து கடந்த இரண்டுநாட்களாக ஒரே இடத்தில் நிலை கொண்டிருந்தது.
இதனால் 2 நாட்களாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் கன மழை பெய்து தமிழகத்தின் ஒரு பகுதியையேவெள்ளக்காடாக்கியுள்ளது.
தற்போது இந்தத் தாழ்வு நிலை வலுவடைந்து மன்னார் வளைகுடா அருகே நகர்ந்து வட தமிழகம் முழுவதும்வியாபித்து நிற்கிறது.
இந் நிலையில் வங்கக் கடலின் மேற்குப் பகுதியில் இன்னொரு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.இதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தின் வட மாவட்டங்கள் மற்றும் புதுவையில் கனத்த மற்றும்மிக கனத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆராய்ச்சி நிலையம் எச்சரித்துள்ளது.
மேலும், தமிழகத்தின் உட்புறப் பகுதிகளிலும் அனேக இடங்களில் நல்ல மழை இருக்கும் எனவும்எச்சரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வட தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
தற்போது காவிரி டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு கூடுதல் நீர்வரும் வாய்ப்பு உள்ளதால், மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்படக் கூடிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
மிக கன மழை எச்சரிக்கை காரணமாக தஞ்சாவூரிலிருந்து சென்னை வரை மாவட்ட நிர்வாகங்கள் உஷார் நிலையில்வைக்கப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் வசித்து வருபவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குஅப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications