கராத்தேவுக்கு முன் ஜாமீன் இல்லை
சென்னை:
சென்னை மாநகராட்சி துணை மேயர் கராத்தே தியாகராஜனின் முன் ஜாமீன் மனுவை சென்னை நீதிமன்றம்தள்ளுபடி செய்துள்ளது.
கராத்தே தியாகராஜன் 1 மாதத்திற்கு மேலாக தலைமறைவாக இருந்து வருகிறார். இவர் உத்திர பிரதேசம், டெல்லிஎன்று மாறி மாறி தலைமறைவாக இருந்து கொண்டு, காங்கிரசில் சேர முயற்சி செய்து வருகிறார்.இந்த சூழ்நிலையில் கராத்தேவை கைது செய்ய 5 போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவரை வலைவீசிதேடிவந்தனர்.
இதனால் கராத்தே தெனாம்பேட்டை போலீசிலும், மத்திய குற்றப்பிரிவு போலீசிலும் தனக்கு எதிராக கொலைமிரட்டல் மற்றும் மோசடி பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறி சென்னை முதன்மை செஷன்ஸ்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இம்மனு நீதிபதி முருகேசன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது எந்த வழக்கில் ஜாமீன் கோருகிறார் என்பதுகுறித்து மனுதாரர் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்ற நீதிபதி முருகேசன், மனுதாரர் முன் ஜாமீன் பெற போதுமான ஆதாரங்களை நீதிமன்றத்தில்சமர்ப்பிக்க வேண்டும். அது அவரது கடமை.
அப்போது தான் நீதிமன்றம் மனுவை ஆராய்ந்து முடிவு செய்ய முடியும். ஊகத்தின் அடிப்படையில் முன் ஜாமீன் தரஇயலாது என்று கூறி கராத்தேவின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications