வெள்ளத்தில் தடுமாறும் நாகை: மூழ்கிய பயிர்கள்
நாகை:
நாகை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் அந்த மாவட்டம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.
கடந்த 6 நாட்களாக நல்ல மழை பெய்து வருவதை தொடர்ந்து வேதநாயகம், செட்டித்தெரு, ஆரிய நாட்டுத் தெரு,கூக்ஸ் சாலை, மறைமலைநகர், பாரதி மாக்கெட் பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை வெள்ளம் புகுந்தது.மேலும் சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 54 இடங்களில் தற்காலிக வீடுகள் அமைக்கப்பட்டு அவர்களை தங்கவைக்கப்பட்டிருந்தனர். இந்த மழையால் வடகுடி, தேத்தி, மேலவாஞ்சூர் உள்பட சில பகுதிகளில் அமைக்கப்பட்டதற்காலிக குடியிருப்புகள் பாதிப்பு அடைந்துள்ளது.
நாகையில் கடல் கொந்தளிப்பு அதிகமாக இருப்பதால் நாகை மாவட்டத்தில் உள்ள 10,000 மீனவர்கள் கடலுக்குள்மீன் பிடிக்க செல்லவில்லை.
இதே போல் நாகை மாவட்டம் திருப்பூண்டி, தலை ஞாயிறு பகுதிகளில் 1500 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சம்பாபயிர்கள் நீரில் மூழ்கி கிடக்கின்றன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 50,000 பேர் திருமண மண்டபம், பள்ளிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.அவர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
நாகை மாவட்டத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக அங்குள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறைஅறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல் தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருவதை தொடர்ந்து அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும்இன்றும்(செவ்வாய் கிழமை), நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சர் வி.சண்முகம்தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டத்தில் சுமார் 50,000 ஹெக்டேர் விளை நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
நாகை மாவட்ட கலெக்டர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சில நாட்களாக வெள்ளப் பகுதிகளிலேயே முகாமிட்டு மீட்புப்பணிகளை நேரில் கண்காணித்து வருகிறார்.
நீரில் மூழ்கிய தண்டவாளம்:
நாகப்பட்டிணம்-நாகூர் இடையிலான ரயில் பாதையில் தண்டவாளம் நீரில் மூழ்கியுள்ளது. மேலும் பல இடங்களில்தண்டவாளத்தில் அரிப்பு ஏற்பட்டதால் இப் பகுதியில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications