இன்றும் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை
சென்னை:
தமிழகத்தின் வட மாவட்டங்களில் இன்றும் மிக பலத்த சூறைக் காற்றுடன் கன மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி நிலையம்எச்சரித்துள்ளது.
சென்னை நகர் மற்றும் வட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. வங்கக் கடலில்உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் எங்கும் நகராமல் அப்படியே நிலை கொண்டுள்ளது.இதனால் தமிழகத்தின் வட பகுதிகளில் கன மழை நீடித்து வருகிறது. இந் நிலையில் சென்னை நுங்கம்பாக்கம் வானிலை ஆராய்ச்சிநிலைய இயக்குனர் ரமணன் கூறுகையில்,
வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை அப்படியே உள்ளது. அது தற்போது வலுவடைந்திருப்பதால்,தமிழகத்தின் வட மாவட்டங்கள், சில உட்புற மாவட்டங்கள், புதுவையில் இன்று மணிக்கு 45 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில்சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்யும்.
சென்னை நகரில் விட்டு விட்டுக் கன மழை பெய்யும். சூறைக் காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனஎச்சரித்துள்ளார்.
இந்த மழை மேலும் 36 மணி நேரம் தொடரும் என்றும் கூறியுள்ளார்.
சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் இன்னும் 36 மணி நேரத்தில் மழை என்னென்னசேதங்களை ஏற்படுத்தப் போகிறதோ என்ற பீதியில் மக்கள் ஆழ்ந்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications