செரீனா வீட்டில் 1.18 கோடி, 10 கிலோ கஞ்சா கிடைத்தது: அதிகாரி சாட்சியம்
மதுரை:
![]() |
நடனக் கடவுளின் பெயர் கொண்ட விவிஐபியின் நெருங்கிய தோழியாகக் கருதப்படும் ஜனனி என்றசெரீனாவின் வீட்டில் ரூ. 1.18 கோடி பணமும், 10 கிலோ கஞ்சாவும் கைப்பற்றப்பட்டதாக கிராம நிர்வாக அதிகாரிநீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார்.
மதுரை தாசில்தார் நகரில் வசிப்பவர் செரீனா. இவருக்கும் நடனக் கடவுளுக்கும் இடையிலான நெருக்கமானநட்பு குறித்து தெரிய வந்தவுடன் போயஸ் தோட்டத்து சக்தி நம்பர்-2 கொதித்தெழுந்தார்.
இந் நிலையில் கஞ்சா வைத்திருத்தாக செரீனாவையும் அவரது தாயார் ரெஜினாவையும், கார் டிரைவர் சதீஷையும்கருப்பாயூரணி போலீசார் கைது செய்தனர்.
பிறகு மதுரை மற்றும் சென்னை நீலாங்கரையில் உள்ள செரீனா வீட்டில் (பல கோடி மதிப்புள்ள இந்தபங்களாவையும் நடனக் கடவுளே வாங்கித் தந்தார்) போலீசார் சோதனை நடத்தி கோடிக்கணக்கான பணம், மற்றும்தங்க நகைகளையும் கைப்பற்றினர். (இதில் வெளியில் காட்டப்பட்ட கொஞ்சம் பணம், நகை தவிர மற்றவை சக்திநம்பர்-2விடமே தரப்பட்டுவிட்டதாகவும் பேச்சு உள்ளது)
இந்த கஞ்சா வழக்கு மதுரை போதைப் பொருள் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி மாணிக்கம் முன்னிலையில் அரசு தரப்பில் சென்னை நீலாங்கரை கிராமஅதிகாரி வெங்கட்ராமன் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
அவரிடம் செரீனா தரப்பு வக்கீல் பொன்.மனோகரன் குறுக்கு விசாரணை நடத்தினார்.
நீதிமன்றத்தில் கிராம அதிகாரி வெங்கட்ராமன் அளித்த வாக்கமூலத்தில்,
என்னையும் தலையாரியான பொன்னனையும் சாட்சிகளாக வைத்து நீலாங்கரையில் உள்ள செரீனாவின் வீட்டில்போலீசார் சோதனை நடத்தினர். அந்தச் சோதனையில் ரூ. 1.18 கோடி ரொக்கப் பணமும், 10 கிலோ கஞ்சாவும், 21பவுன் நகைகளும் கைப்பற்றப்பட்டன என்று கூறினார்.அப்போது நீதிபதி குறுக்கிட்டு நகைகளை மதிப்பிடவும், பணத்தை கணக்கிடவும் எங்வளவு நேரம் ஆனது என்றுகேட்டார். அதற்கு நகைகளை மதிப்பிட ஒரு மணி நேரமும், பணத்தை கணக்கிட அரை மணி நேரமும் பிடித்ததுஎன்று கிராம அதிகாரி பதிலளித்தார்.
விசாரணையின் போது தங்க நகைகளை நீதிமன்றத்தில் கிராம அதிகாரியிடம் காண்பித்து இந்த நகைகள்எதிரிகளின் வீட்டில் கைப்பற்றப்பட்டதா? என்று கேட்கப்பட்டது. அதற்கு ஆம் என்று அவர் பதிலளித்தார்.
பிறகு இந்த வழக்கு மீதான விசாரணையை வருகிற 16ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications