2 புயல்கள்: 2 நாட்களுக்கு மழை விளாசும்!
சென்னை:
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் வட மாவட்டங்களில் இன்று முதல் 2 நாட்களுக்கு கன மழை பெய்யும் எனஎச்சரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 10 மாவட்ட நிர்வாகங்கள் அதிகபட்ச உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
வங்கக் கடலில் ஒன்றுக்கு இரண்டாக புயல் சின்னங்கள் உருவாகியுள்ளன. இவை இரண்டுமே வட தமிழகக்கடற்கரையோரத்தில் வியாபித்து சூழ்ந்திருப்பதால் இன்று முதல் 2 நாட்களுக்கு வட தமிழகத்தில் கன மழையும்,சூறைக்காற்றுடன் கூடிய மிக கனத்த மழையும் பெய்யும் என நுங்கம்பாக்கம் வானிலை ஆராய்ச்சி நிலையம்எச்சரித்துள்ளது.இதையடுத்து சென்னை முதல் தஞ்சை வரையிலான மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர்களை அரசுஉஷார்படுத்தியுள்ளது. அனைத்து முன்னேற்பாடுகளுடன் வெள்ள நிலைமையை சமாளிக்க மாவட்ட நிர்வாகங்கள்தயார் நிலையில் உள்ளன.
சென்னை நகரில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதேபோல காஞ்சிபுரம், புதுவை,கடலூர், நாகை உள்ளிட்ட பகுதிகளிலும் நல்ல மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
கன மழையுடன், மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்துடன் பலத்த சூறைக்காற்றும் வீசும் எனஎச்சரிக்கப்பட்டுள்ளதால், மீனவர்கள் யாரும் கடலுக்குள் போக வேண்டாம் என கோரப்பட்டுள்ளனர்.
கடந்த 2 வாரங்களாக பெய்த மழையால் ஏகப்பட்ட சேதங்களை சந்தித்து விட்ட தமிழகம், இன்று முதல் பெய்யப்போகும் அடுத்தகட்ட கன மழையை பெரும் அச்சத்துடன் எதிர்கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications