பகவத் கீதை: கருணாநிதி மீதான வழக்கு ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பகவத் கீதை குறித்து அவதூறாக கட்டுரை எழுதியதாக திமுக தலைவர் கருணாநிதி மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணை வரும்18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு முரசொலியில் பகவத் கீதை குறித்தம், இந்துக்கள் குறித்தும் கருணாநிதி கட்டுரை எழுதியிருந்தார். இதுஇந்துக்களின் மனதைப் புண்படுத்தும் விதமாக இருப்பதாகக் கூறி சென்னை வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்த கெளதம் என்பவர்சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு விசாரணை 18வது குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இதுவரை பலமுறை சம்மன்அனுப்பப்பட்டும் கருணாநிதி ஆஜராகவில்லை. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அவர் ஆஜராவார் என்றுகருதப்பட்டது.
எனவே நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆனால் கருணாநிதி விசாரணைக்கு வரவில்லை.
18வது நீதிமன்ற நீதிபதி விடுமுறையில் இருந்ததால் 23வது நீதிமன்ற நீதிபதி உமா மகேஸ்வரி முன்பு இந்த வழக்கு விசாரணைக்குவந்தது. அப்போது இந்த வழக்கு விசாரணையை வருகிற 18ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications