முன்னாள் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் மரணம்
டெல்லி:
![]() |
முன்னாள் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் இன்று மாலை காலமானார்.
நிமோனியா தாக்குதலையடுத்து கடந்த சனிக்கிழமை அவர் டெல்லி ராணுவ மருத்துவ ஆராய்ச்சி மையத்தில்அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. இதனால் அவருக்கு செயற்கை சுவாசம்அளிக்கப்பட்டு வந்தது.
இந் நிலையில் அவரது சிறு நீரகங்கள் பாதிக்கப்பட்டன. தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடர்ந்துசிகிச்சைகள் வழங்கப்பட்டன. ஆனால், இன்று மாலை 5.45 மணியளவில் அவர் காலமானார்.
முன்னதாக அவர் காலையிலேயே இறந்துவிட்டதாக தகவல்கள் வந்தன. ஆனால், அத் தகவலை ராணுவ மருத்துவமனைவட்டாரங்கள் மறுத்தன. அவரது நிலைமை தொடர்ந்து மிகவும் கவலைக்கிடமாகவே உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந் நிலையில் மாலையில் அவர் உயிர் பிரிந்ததாக ராணுவ செய்தித் தொடர்பாளர் நிருபர்களிடம் தெரிவித்தார்.
முன்னதாக பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனைக்குச் சென்று நாராயணனைப் பார்த்தார். மருத்துவர்களிடம் அவரது உடல்நிலை குறித்து விசாரித்தார்.
கேரளத்தைச் சேர்ந்த நாராயணன் 1920ல் பிறந்தவர். துணை ஜனாதிபதியாக இருந்து பின்னர் ஜனாதிபதியானவர். இந்தியஜனாதிபதியான முதல் தலித் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்லூரி விரிவுரையாளராக தனது பணியைத் துவக்கிய நாராயணனன், பின்நர் த இந்து மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியா ஆகியநாளிதழ்களிலும் பணியாற்றினார். இதையடுத்து லண்டனில் பத்திரிக்கையாளராகப் பணியாற்றினார்.
அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் கோரிக்கையை ஏற்று நாடு திரும்பிய நாராயணன், அவரது யோசனைப்படிஇந்திய வெளியுறவுத்துறை பணியில் சேர்ந்தார்.
பர்மா, ஜப்பான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தாய்லாந்து, துருக்கி, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் தூதரகஅதிகாரியாகவும், தூதராகவும் பணியாற்றினார். பின்னர் இந்திய வெளியுறவுத்துறை செயலாளரானார்.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத் துணை வேந்தராகவும் இருந்துள்ளார். பின்னர் அரசியலில் ஈடுபட்டு காங்கிரஸ் கட்சியின்சார்பில் 3 முறை கேரளத்தில் இருந்து எம்பியாக தேர்வு செய்யப்பட்டார்.
மத்திய திட்டத்துறை, வெளியுறவுத்துறை, அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பதவிகளை வகித்துள்ளார்.
பர்மாவில் தூதராக இருந்தபோது அந் நாட்டைச் சேர்ந்த உஷாவை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். நாராயணன்-உஷாதம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர். இப்போது உஷாவும் உடல் நிலை குன்றியுள்ளார்.
இந்திய-அமெரிக்க உறவு உள்பட பல புத்தகங்களையும் நாராயணன் எழுதியுள்ளார்.
கடந்த பாஜக ஆட்சியின்போது பிகாரில் லாலு பிரசாத் அரசைக் கலைக்க வாஜ்பாய் அரசு இரு முறை பரிந்துரை செய்தபோதும்அதை ஏற்க மறுத்தவர் நாராயணன். இதனால், இவருக்கு மீண்டும் ஜனாதிபதியாகும் வாய்ப்பைத் தர பாஜக மறுத்துவிட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி













Click it and Unblock the Notifications