• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குஷ்பு மீண்டும் வம்பு: துணைக்கு சுகாசினி

By Staff
|
Kushboo

தமிழகப் பெண்களின் கற்பு குறித்து தான் பேசியதில் எந்தத் தவறும் இல்லை என்றும் அது குறித்து தான்வெட்கப்படவும் இல்லை என்றும் குஷ்பு மீண்டும் திருவாய் மலர்ந்துள்ளார்.

திருமணத்துக்கு முன்பே செக்ஸ் வைத்துக் கொள்வதில் தவறில்லை என்றும், அப்படி செக்ஸ் வைத்துக் கொள்ளும்போதுபால்வினை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் குஷ்பு கூறினார். மேலும் தமிழகத்தில்பெண்கள் திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்வது அதிகரித்து வருவதாகவும் பேசினார்.

இதற்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இந்த சம்பவம் தொடர்பாக தமிழகத்தில் பெரும்பான்மையானமாவட்ட நீதிமன்றங்களில் குஷ்பு மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Kushboo

இந்த நிலையில் தான் சொன்ன கருத்துக்காக வெட்கப்படவில்லை என்று குஷ்பு திமிர்த்தனமாகக் கூறியுள்ளார்.

செவன்த் சேனல் மாணிக்கம் நாராயணன் நடத்தும் சர்வதேச பட விழாவின் தொடக்க விழா நிகழ்ச்சி சென்னைபிலிம் சேம்பர் தியேட்டரில் நடைபெற்றது. அந்த விழாவில் பங்குகொண்ட குஷ்பு பேசியதாவது:

நான் யோசித்து பேசியிருந்தால் எனக்கு பிரச்சினை வந்திருக்காது. புரிய வேண்டியவர்களுக்கு புரிந்திருந்தால்இந்த பிரச்சினை வந்திருக்காது.

இங்கு என்னை பற்றி பேசும் போது சோதனைகளை சாதனையாக மாற்றி காட்டுபவர் குஷ்பு என்று சொன்னார்கள்.நான் ஒவ்வொரு தடை கற்களைகளையும் வெற்றி படிக்கட்டுகளாக நினைப்பவள். அது தான் என் வெற்றிக்குகாரணம்.

நான் முன்பு சொன்ன கருத்தில் எந்த தவறும் இல்லை. அதற்காக நான் வெட்கப்படவும் இல்லை என்றார்.

நிகழ்ச்சியில் நடிகையும் இயக்குனர் மணிரத்னத்தின் மனைவியுமான சுகாசினி பேசுகையில்,

குஷ்புவுக்கு பிரச்சினை ஏற்பட்ட போது நான் அமெரிக்காவில் இருந்தேன். யாரும் என்னிடம் அது பற்றி கருத்துகேட்கவில்லை. பிரச்சனையை வெற்றிகரமாக சந்தியுங்கள் என்று குஷ்புவுக்கு எஸ்எம்எஸ் அனுப்பினேன்.

1947ல் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. அது ஆண்களுக்கு மட்டும் தானா? பெண்களுக்கு இல்லையா? நான்இப்படி பேசினால் என்னை பரமக்குடிக்கு அனுப்பி விடுவீர்களா?

Suhasini

தமிழ்நாட்டில் பிறந்தால் இரண்டு கொம்பா முளைத்து இருக்கிறது?. வெளி மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்குவாழ வந்த ஒரு பெண்ணை அவமானப்படுத்தியதற்காக ஒட்டு மொத்த தமிழர்கள் அனைவரும் வெட்கி தலைகுனிய வேண்டும்.

எய்ட்ஸ் விழிப்புணர்வுக்கான ஒரு கருத்தை சொன்னார். அதை புரிந்து கொள்ளாமல் அவரை அவமானப்படுத்திவிட்டீர்கள். இதற்காக தமிழர்கள் சார்பில் நான் குஷ்புவிடம் மன்னிப்பு கேட்கிறேன் என்றார்.

இதை தொடர்ந்து சுகாசினியை நோக்கி ஓடி வந்த குஷ்பு அவரைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார்.

நிகழ்ச்சியில் இயக்குனர் பாரதிராஜா பேசுகையில், சினிமாவில் இருப்பவர்கள் எது பேசினாலும்பிரச்சனையாகிவிடுகிறது. இதனால் நாம் பேசும்போது ஒன்றுக்கு பல தடவை யோசித்துப் பேச வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் நடிகர் பார்த்திபனும் கலந்து கொண்டனர்.

நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு:

இதற்கிடையே சங்கரன் கோவில் நீதிமன்றத்தில் நடிகை குஷ்பு இந்த மாதம் 21ம் தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக பெண்களின் கற்பு குறித்து குஷ்பு தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சங்கரன் கோவில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நகர குற்றவியல்நீதித்துறை நடுவர் மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிபதி சரவணக்குமார், நடிகை குஷ்பு, இந்தியா டுடே பத்திரிகை ஆசிரியர் பிரபு சாவ்லா ஆகியோர் நவம்பர் 8ம் தேதி சங்கரன் கோவில்நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டார்.

இடைக்காலத் தடை:

இந் நிலையில் அரியலூர் மற்றும் திருவண்ணாமலை நீதிமன்றங்களில் குஷ்புவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரிக்க 4 வார கால தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விசாரணைக்கு குஷ்பு நேரில் ஆஜராக வேண்டும் என இந்த நீதிமன்றங்கள் விதிக்க உத்தரவுக்கும் உயர் நீதிமன்ற நீதிபதி பானுமதி இடைக்காலத் தடைவிதித்தார்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X