கடலூர், நாகப்பட்டிணத்தில் பெரும் சேதம்: 3ம் எண் புயல்- மீட்புப் பணியில் கடற்படை
கடலூர் - நாகப்பட்டிணம்:
சென்னையை மிதக்க விட்ட மழை தற்போது தமிழகத்தின் வட மாவட்டங்களை குறிவைத்துக் கொட்டி வருகிறது.
கடலூரில் கன மழை காரணமாக வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து மக்களை மீட்க கடலோரக் காவல் படையினரின் உதவிகோரப்பட்டுள்ளது.
தமிழகத்தின் வட பகுதிகளில் இன்றும் மிக கனத்த மழை பெய்து வருகிறது. ஏற்கனவே தண்ணீரில் தத்தளிக்கும் இந்தப்பகுதிகளை மழை மேலும் மூழ்கடித்து வருகிறது.
![]() |
குறிப்பாக கடலூர், நாகப்பட்டிணம் மாவட்டங்களில் வெள்ள நிலைமை மிக மோசமாக உள்ளது. இங்கு தாழ்வான பகுதிகள்அனைத்தும் தண்ணீரில் மூழ்கிவிட்டனர். நாகை மாவட்டத்தில் மணல்மேடு சீர்காழி என்ற பகுதியில் மட்டும் 85,000 பேர்வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
இவர்கள் 55 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உணவு, குடிநீர், மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது.
கடலூரிலும் பல ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு 35 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வீராணம் ஏரி நிரம்பிவிட்டதால் அந்த ஏரிக்கு வரும் நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த நீர் காட்டுமன்னார்கோவில் பகுதியில்15க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குள் புகுந்துவிட்டது. இதையடுத்து அந்த கிராம மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.இவர்களுக்காக 25 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் சிதம்பரத்திலும் மழை வெள்ளத்தால் வீடுகளுக்குள் நீர் புகுந்த பகுதிகளைச் சேர்ந்த சுமார் 20,000 பேர் 10 முகாம்களில்தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கடலூர், நாகப்பட்டிணத்தில் நீர் சூழ்ந்த பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மீனவப் படகுகள் மூலம் தொடர்ந்து மீட்கப்பட்டுவருகின்றனர். மேலும் இந்த மீட்புப் பணிக்கு கடலோரக் காவல் படையின் உதவியும் கோரப்பட்டுள்ளது என கடலூர் மாவட்டஆட்சியர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.
இதையடுத்து அந்தப் படையின் படகுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த முறை மழையால் கடலூர் தான் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் வீராணம் ஏரிக்கு வினாடிக்கு10,000 கன அடி வீதம் தண்ணீர் வருகிறது. இதனால், ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. வீராணம் தண்ணீர்வெளியேறி 50க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இந்த நீர் இதுவரை 30,000 ஹெக்டேர் விளை நிலங்களையும் மூழ்கடித்துவிட்டது.
![]() |
நாகப்பட்டிணம் மாவட்டத்திலும் விடிய விடிய மழை பெய்தது. குறிப்பாக மயிலாடுதுறையில் மிக கனத்த மழை பெய்தது. இம்மாவட்டத்தில் 60,000 ஹெக்டேர் விளை நிலங்களில் தண்ணீர் புகுந்துள்ளதாகவும், மொத்தம் 87,000 பேர் பாதுகாப்பானஇடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடிசைகள் நீரில் மூழ்கி விட்டன. இம் மாவட்டத்தில் ஒரே நாளில்வெவ்வேறு சம்பவங்களில் நான்கு பேர் உயிரிழந்தனர்.
காரைக்காலில் வரலாறு காணாத வகையில் 24 மணி நேரத்தில் 30 செ.மீட்டர் மழை பெய்து கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் மேலும், மழை நீடிக்கும்என்று எச்சரிக்கப்பட்டிருப்பதால் இந்த மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை துவங்கியதற்கு பிறகு தமிழகத்தில் மழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 143 ஆகஉயர்ந்துள்ளது.
கடந்த ஐந்து நாட்களாக மழை நீடித்து வருவதால் பெரம்பலூர் மாவட்டம் ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் உள்ளிட்டஇடங்களில் பல பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகராமல் இருப்பதாலும் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிஇருப்பதாலும் மேலும், 24 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்களில் மழை நீடிக்கும் என்று வானிலை மையம்எச்சரித்துள்ளது.
நாகப்பட்டிணத்தில் கடந்த ஒரு வாரத்தில் 56 செ.மீ. மழை பெய்துள்ளது. நாகை துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கைக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி














Click it and Unblock the Notifications