செளதியில் மத சுதந்திரம் இல்லை: அமெரிக்கா
வாஷிங்டன்:
செளதி அரேபியா, பாகிஸ்தான், இஸ்ரேல் ஆகிய நாடுகளில் மதச் சுதந்திரமே இல்லை என அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.அதே நேரத்தில் இந்த விஷயத்தில் இந்தியா நல்ல முன்னேற்றம் காட்டி வருகிறது என அமெரிக்கா கூறியுள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில்,செளதி அரேபியா, பாகிஸ்தானில் இஸ்லாமியர்கள் தவிர்த்து மற்ற மதத்தினருக்கு மதச் சுதந்திரம் முழுமையாகவேமறுக்கப்படுகிறது. இங்கு மதச் சுதந்திரமே சுத்தமாக இல்லை என்றே கூறலாம்.
இஸ்லாம் தான் அதிகாரப்பூர்வ மதமாக உள்ளது. குடிமக்கள் அனைவருமே இஸ்லாமியர்களாகவே இருக்க வேண்டும் என்றஅளவுக்கு நிர்பந்தம் உள்ளது.
இஸ்ரேலில் இஸ்லாமிய அரேபியர்கள், கிருஸ்துவர்கள் ஆகியோரின் மத உரிமைகள் மறுக்கப்படுகின்றன. இவர்களுக்கு வீடுகள்ஒதுக்குவதில் ஆரம்பித்து, கல்வி, வேலைவாய்ப்புகளிலும் பேதம் காட்டப்படுகிறது.
அரேபியர்கள், கிருஸ்துவர்களின் அடிப்படை உரிமைகளை இஸ்ரேல் மறுப்பதால் தான் அரபு நாடுகளுக்கும் பிற நாடுகளுக்கும்இஸ்ரேலுடன் எப்போதுமே பதற்றம் உச்சத்தில் உள்ளது.
அதே போல பிரான்சிலும், ஜெர்மனியிலும், பெல்ஜியத்திலும் பிற மதத்தினர் என்றாலே ஏதோ ஆபத்தான பிரிவினர் என்பதுபோன்ற தோற்றம் உள்ளது.
பாகிஸ்தானில் சிறுபான்மையினர் மீதான ஒடுக்குமுறைகள் சட்டப்பூர்வமாகவே உள்ளன. அங்கு சிறுபான்மையினருக்கு எதிரானசட்டங்கள் அமலில் உள்ளன.
அதே போல பர்மா, எரிட்ரியா, சீனா, இரான், வட கொரியா, சூடான், வியட்நாம் ஆகியவற்றில் மதச் சுதந்திரம் மதிக்கப்படுவதேஇல்லை.
இந்தியாவில் ஆட்சிக்கு வந்துள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மதசார்பின்மையைக் கடைபிடித்து வருகிறது. சில பிரச்சனைகள்இருந்தாலும் இந்தியாவில் மதச் சுதந்திரத்தைக் காப்பதில் முன்னேற்றம் காணப்படுகிறது.
இந்த விஷயத்தில் மத்திய அரசு நேர்மையாக நடந்தாலும் சில மாநில அரசுகளின் (குஜராத்?) செயல்பாடுகள் திருப்திகரமாகஇல்லை.
அதே போல ஜார்ஜியா, துர்க்மேனிஸ்தான், ஐக்கிய அரபு நாடுகளிலும் அனைத்து மதத்தினருக்கும் சம சுதந்திரம் கிடைப்பதில்முன்னேற்றம் காணப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications