வெள்ளத்தை தடுத்த 2 திமுக உள்ளாட்சித் தலைவர்கள் கைது
சென்னை:
சென்னை அருகே மழை நீரைத் தடுத்ததாக 2 திமுக பேரூராட்சித் தலைவர்களை போலீஸார் அதிரடியாக கைதுசெய்தனர்.
கன மழையால் சென்னைப் புறநகர்ப் பகுதியில் உள்ள பல ஏரிகள் நிரம்பி வழிகின்றன. சில ஏரிகளில் உபரி நீர்கால்வாய் மூலமாக போக வழியில்லாததால், ஊருக்குள் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.பல இடங்களில் ஏரிக் கரைகளை, அங்கு ஆக்கிரமிப்பு செய்து வசித்து வருவோர், தங்களது வீடுகளைக் காத்துக்கொள்ள கரைகளை உடைத்து தண்ணீரை ஊருக்குள் வெளியேற்றி வருகின்றனர்.
இவ்வாறு ஊருக்குள் வரும் மழை நீரைத் தடுத்ததாக கூறி 2 திமுக பேரூராட்சித் தலைவர்களை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.
மதுரவாயல் ஏரியில் அதிக அளவில் உபரி நீர் வெளியேறி வளசரவாக்கம், ஆழ்வார் திருநகர் உள்ளிட்ட சிலபகுதிகளில் புகுந்துள்ளது. இதனால் இப்பகுதிகள் மிதக்கின்றன.
இந் நிலையில் வளசரவாக்கம் பகுதிக்குள் வரும் மழை நீரை வளசரவாக்கம் திமுக பேரூராட்சித் தலைவர்மதியழகனும், பிற திமுகவினரும் சேர்ந்து அடைப்பு போட்டு தடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் வேறு பகுதிகளில்மழை நீர் திரும்பி பெரும் இடையூறை ஏற்படுத்தியது. இதுகுறித்து சுரேஷ் என்பவர் போலீஸில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் மதியழகனை போலீஸார் கைது செய்தனர். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதிஉத்தரவிட்டதைத் தொடர்ந்து மதியழகன் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதேபோல, நெற்குன்றம், கந்தசாமி நகருக்குள் வந்த மழை நீரைத் தடுத்து வேறு பகுதிக்குத் திருப்பி விட்டதாகநெற்குன்றம் திமுக பேரூராட்சித் தலைவர் பரமசிவம் மீது போலிஸில் புகார் கொடுக்கப்பட்டது. இதன்அடிப்படையில் அவரும் கைது செய்யப்பட்டு 15 நாள் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த இரு கைதுகளையும் எதிர்த்து சம்பந்தப்பட்ட பகுதிகளில் திமுகவினரும், அந்தப் பகுதி பொது மக்களும்சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications