ஜோர்டன் ஹோட்டல்களில் தொடர் குண்டு வெடிப்பு: 57 பேர் பலி
அம்மான்:
ஜோர்டன் தலைநகர் அம்மானில் 3, நட்சத்திர ஹோட்டல்களில் நடந்த தற்கொலைப் படையினரின் தொடர் குண்டு வெடிப்புதாக்குதலில் 57 பேர் பலியாயினர். 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
அம்மானில் உள்ள கிராண்ட் ஹயாத் ஹோட்டல், ரேடிசன் எஸ்.ஏ.எஸ் மற்றும் டேஸ் இன் ஹோட்டல்களில் தற்கொலைப்படைதாக்குதல் நடத்தப்பட்டது. அங்கு பயங்கர சத்தத்துடன் குண்டுகள் வெடித்தன. இதனால் அப்பகுதி முழுவதும் கடும் புகைமூட்டம்காணப்பட்டது.இதில் 57 பேர் பலியானார்கள்; 300 பேர் காயமடைந்துள்ளனர். ஹோட்டலில் தங்கி இருந்தவர்களை அவசரம் அவசரமாகவெளியேற்றிக் கொண்டிருக்கிறார்கள். பிரதம மந்திரி அட்னன் பட்ரன் சம்பவம் நடந்த கிராண்ட் ஹயட் ஹோட்டலுக்குவிரைந்துள்ளார்.
ஜோர்டன் எல்லை மூடப்பட்டுள்ளது. அங்குள்ள மற்ற ஸ்டார் ஹோட்டல்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
வெளிநாட்டினர் அதிகம் தங்கும் 5 நட்சத்திர ஹோட்டலான கிராண்ட் ஹயாத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது. அப்போது தற்கொலைப் படையை சேர்ந்த தீவிரவாதி ஹோட்டலில் உள்ள பால் ரூமில் நின்று தன்னிடமிருந்தகுண்டை வெடிக்கச் செய்ததில் பலர் மரணமடைந்தனர்.
இந்த சம்பவம் நடந்த சில நிமிடங்களில் இஸ்ரேல் தூதரகம் அருகிலுள்ள 3 நட்சத்திர ஹோட்டலில் காரில் வந்ததற்கொலைப்படை தீவிரவாதி ஒருவன் தன்னிடமிருந்த குண்டை வெடிக்கச் செய்தான்.
இந்த குண்டு வெடிப்புகளை தனது இடுப்பு பெல்டில் கட்டிக்கொண்டு ஒரு தனி மனிதன் செய்திருக்க வேண்டும் அல்லது காரில்வந்து ஒவ்வொரு இடமாக குண்டுகளை வெடிக்கச் செய்திருக் வேண்டும் என்று அந்நாட்டு துணை பிரதம மந்திரிதெரிவித்துள்ளார்.உயிரிழந்தவர்களில் பெரும்பான்மையோர் ஜோர்டானை சேர்ந்தவர்கள் என்றார்.
தீவிரவாதிகளின் இந்த கொடூர சம்பவத்திற்கு கஜாகிஸ்தான் அரசர், ஐநா தலைவர் கோபி அன்னான், அமெரிக்கா உள்ளிட்டநாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications