ஜெயேந்திரர் வழக்கு: 28 முதல் பாண்டிச்சேரியில் விசாரணை
செங்கல்பட்டு:
சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை வரும் 28ம் தேதி முதல் பாண்டிச்சேரி நீதிமன்றத்தில் தொடங்கவுள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்குசெங்கல்பட்டு அமர்வு நீதிமன்றத்தில் இதுவரை விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் ஜெயேந்திரர்,விஜயேந்திரர் உள்பட 25 பேர் கைது செய்யப்பட்டனர்.அவர்களில் காண்டிராக்டர் ரவி சுப்பிரமணியம் அப்ரூவர் ஆனார். மற்ற 24 பேர் மீதும் குற்றப் பத்திரிக்கை தாக்கல்செய்யப்பட்டு விட்டது.
இந் நிலையில் வழக்கை தமிழகத்திலிருந்து வேறு மாநிலத்திற்கு மாற்றக் கோரி ஜெயேந்திரர் சார்பில்உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த உச்சநீதிமன்றம் வழக்கில் முதல்வர்ஜெயலலிதாவின் நேரடி தலையீடு இருப்பதால் அதை பாண்டிச்சேரி அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றிஉத்தரவிட்டது.
இந் நிலையில், செங்கல்பட்டு அமர்வு நீதிமன்றத்தில் நேற்று கடைசியாக இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.அப்போது 21 பேர் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். கதிரவன், ஜெயேந்திரர், விஜயேந்திரர்நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
பின்னர் நீதிபதி அக்பர் அலி, இவ்வழக்கு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பாண்டிச்சேரி அமர்வு நீதிமன்றத்திற்குமாற்றப்படுகிறது. வருகிற 28ம் தேதி பாண்டிச்சேரி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் கண்டிப்பாகஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications