கனிமொழி, கார்த்தி சிதம்பரத்தின் கருத்து.காம்
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி மற்றும் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக்சிதம்பரம் ஆகியோர் இணைந்து கருத்து என்ற புதிய அமைப்பைத் தொடங்கியுள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழகம் மாணவ, மாணவியருக்கு விதிக்கப்பட்ட உடை கட்டுப்பாட்டுக்கு எதிராக கார்த்திக்சிதம்பரம் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். துணைவேந்தர் விஸ்வநாதன் முன்னிலையிலேயே தனது கருத்தைபகிரங்கமாக தெரிவித்திருந்தார்.அதேபோல கனிமொழியும் பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் துணை வேந்தரின் செயலுக்கு தனது கடும்எதிர்ப்பைத் தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது.
நம்மைப் போல சுதந்திரமாக கருத்து வெளியிட எத்தனையோ பேர் நினைத்திருப்பார்கள், ஆனால் அவர்களுக்குசரியான தளம் கிடைக்காமல் இருந்திருக்கும். எனவே அனைவரும் தங்களது கருத்துக்களை சுதந்திரமாகவும்,வெளிப்படையாகவும் வெளியிடும் வகையில் ஒரு அமைப்பைத் தொடங்கினால் என்ன என்று இருவரும் சேர்ந்துபேசியதன் விளைவாக உருவாகியுள்ளதே, கருத்து என்ற புதிய அமைப்பு.
வரும் 13ம் தேதி சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கருத்து அமைப்பு தொடங்கப்படுகிறது.
இதற்காக www.karuthu.com என்ற இணைய தளத்தையும் இருவரும் அமைத்துள்ளனர். இந்த அமைப்பு குறித்துகார்த்திக் சிதம்பரம் கூறுகையில்,
இது அரசியல் சார்பற்ற அமைப்பு. இதில் தலைவர், செயலாளர் என எந்தப் பதவியும் இல்லை. அனைவருமேஉறுப்பினர்கள். எந்தவிதக் கட்டணம் இல்லாமல் யார் வேண்டுமானாலும் இதில் சேரலாம்.
எந்தப் பிரச்சினை குறித்தும், தனிப்பட்ட முறையில் சாடல் இல்லாமல், யார் வேண்டுமானாலும் தங்களதுகருத்துக்களை, கருத்து அமைப்பு மூலம் எடுத்து வைக்கலாம்.
அரசியல், இலக்கியம், கலை, நாடகம் என எந்தத் துறை குறித்தும் இதில் விவாதிக்கலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications