கே.ஆர்.நாராயணன் உடல் தகனம்
டெல்லி:
நேற்று காலமான முன்னாள் ஜனாதிபதி கே.ஆர். நாராயணனின் உடல் இன்று டெல்லி ராஜ்காட் மைதானத்தில்தகனம் செய்யப்பட்டது.
சிறுநீரகக் கோளாறு மற்றும் நிமோனியா காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாராயணன்நேற்று காலமானார். அவரது உடல் டெல்லியில் உள்ள அவருடைய வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்காகவைக்கப்பட்டிருந்தது.பிறகு அவரது உடல் அங்கிருந்து ராணுவ வாகனத்தில் ராஜ்காட் மைதானத்திற்கு ஊர்வலமாக கொண்டு கொண்டுசெல்லப்பட்டது.
அங்கு அவரது உடலுக்கு ஜனாதிபதி அப்துல் கலாம், பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர்சோனியா காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார்கள்.
இதை தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி கே.ஆர். நாராயணனின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசுமரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
நாராயணனின் மறைவையடுத்து ஒருவார கால துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது. நாடு முழுவதும் தேசியக் கொடிகள்7 நாட்களுக்கு அரைக் கம்பத்தில் பறக்கும்.
தலைவர்கள் இரங்கல்:
முன்னாள் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் மனித பண்புகளின் அடையாளமாக திகழ்ந்தவர் என்று ஜனாதிபதிஅப்துல் கலாம் புகழாரம் சூட்டியுள்ளார். அவரது குடும்பத்தாருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும்தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமரும் பாஜக மூத்த தலைவருமான வாஜ்பாய் வெளியிட்டுள்ள இரங்கலில் தனது கடின உழைப்பால்வாழ்நாள் முழுவதும் பல சாதனைகளை படைத்தார். சிறந்த ராஜதந்திரியை நாடு இழந்து தவிக்கிறது என்றுகூறியுள்ளார்.
தமிழக கவர்னர் பர்னாலா வெளியிட்டுள்ள அனுதாப செய்தியில் முன்னாள் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன்மறைவு கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்தேன். சாதாரண குடும்பத்தில் பிறந்து நாட்டின் மிக உயர்ந்த பதவியைஅடைந்தார். ஏழைகளின் நல்வாழ்விற்காக பாடுபட்டவர். அவரது மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு என்றுகூறியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி தமது இரங்கல் அறிக்கையில் அமைதி, அடக்கம், ஆற்றல் அடித்தட்டு மக்களுக்காககுரல் எழுப்பும் அஞ்சாமை அத்தனை சிறப்புகளும் கொண்ட மலர்க் கொத்து மனம் கொண்ட மனிதர் நாட்டுக்காக,மக்களுக்காக சுவாசத்தை சொந்தமாக்கியவர், தேச விடுதலைக்காக தன்னை ஒப்படைத்துக் கொண்டவர்.
இந்திய மக்களை ஆளாக்கி விட்டுப் பிரிந்து விட்டார் என்ற துயரத்தை தாங்கிக் கொள்வது எளிதல்ல. அவருடையகுடும்பத்தாருக்கு திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கலில் இந்திய நாட்டின் குடியரசு தலைவராகதலைசிறந்த மனிதாபிமானியாக பொது வாழ்வில் புடம் போட்ட தங்கமாக பிரகாசித்த கே.ஆர்.நாராயணன்மறைவு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அவரது மறைவு பொது வாழ்வுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்றுதெரிவித்துள்ளார்.
கே.ஆர்.நாராயணன் மறைவையொட்டி இந்தியா முழுவதும் ஒரு வாரம் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்தியஅரசு அறிவித்துள்ளது. ஒரு வாரம் தேசிய கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும். அதிகாரப் பூர்வ பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications