பூண்டி ஏரி திறப்பு: வெள்ளம் பாயும்- மக்களுக்கு எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டம் பூண்டியில், கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பூண்டி நீர்த் தேக்கம்நிரம்பியுள்ளதால், அதிலிருந்து நீர் திறந்துவிடப்படவுள்ளது.

இதனால் தாழ்வான பகுதிகளில் இருப்போர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

சென்னைக்குக் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்று பூண்டி அணை. பூண்டி ஏரி என்றும் இதுஅழைக்கப்படுகிறது. பல ஆண்டுகளாக நிரம்பாமல் இருந்து வந்த பூண்டி அணைக்கு தற்போது மழை காரணமாகஅதிக அளவில் நீர் வரத்து உள்ளது.

பூண்டி அணையின் மொத்தக் கொள்ளளவு 35 அடியாகும். தொடர் மழை மற்றும் ஆந்திராவிலிருந்து வந்தகிருஷ்ணா நீரின் காரணமாக 32.5 அடி அளவுக்கு அணையில் நீர் நிரம்பியுள்ளது.

இதற்கு மேலும் நீரை சேமித்து வைக்க முடியாது என்பதால் இதற்கு மேல் வரும் தண்ணீரை கடலுக்குத் திருப்பி விடமுடிவு செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து உபரி நீர் இன்று கொசஸ்தலை ஆற்றின் மூலமாக கடலுக்கு திருப்பி விடப்படுகிறது. இதற்காகஅணை திறக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, கொசஸ்தலை ஆற்றங்கரை ஓரமாக தாழ்வான பகுதிகளில்வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

சென்னைக்குக் குடிநீர் வழங்கும் புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய ஏரிகளும் வேகமாக நிரம்பி வருவதுகுறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+