விலகியது ஒரு புயல் சின்னம்: இன்னும் 36 மணி நேரத்திற்கு கன மழை தொடரும்
சென்னை:
வங்கக் கடலில் உருவாகியிருந்த இரண்டு புயல் சின்னங்களில் ஒன்று அரபிக் கடல் நோக்கி நகர்ந்துவிட்டது.இன்னொரு புயல் சின்னம் வங்கக் கடலில் அதே இடத்தில் தொடர்ந்து நிலை கொண்டிருப்பதால் இன்னும் 36 மணிநேரத்தில் தமிழகத்தின் வட பகுதி மற்றும் உட்புறப் பகுதிகளில் மழை தொடரும் என வானிலை ஆராய்ச்சிநிலையம் எச்சரித்துள்ளது.
வங்கக் கடலில் தமிழகத்திற்கும், இலங்கைக்கும் இடையே இரண்டு குறைந்த காற்றழுத்த புயல் சின்னங்கள்உருவாகியிருந்ததால், வட தமிழகத்தில் கன மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது.அதன்படி விழுப்புரம், கடலூர், நாகை உள்ளிட்ட வட மாவட்டங்களில் புதன்கிழமை முழுவதும் கன மழைபெய்தது. சென்னையிலும் பல இடங்களில் கன மழை பெய்தது. பெரும்பாலான பகுதிகளில் தூறல் மழை இருந்தது.
இந் நிலையில், இரண்டு புயல் சின்னங்களில் ஒன்று அரபிக் கடலை நோக்கி நகர்ந்து சென்று விட்டது. இன்னொருபுயல் சின்னம் ஏற்கனவே உள்ள இடத்தில் தொடர்ந்து நிலைத்து நிற்கிறது.
இதன் காரணமாக வட மாவட்டங்கள், புதுவை மற்றும் தமிழகத்தின் உட்புறப் பகுதிகளில் அடுத்த 36 மணிநேரத்திற்கு கன மழை இருக்கும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் எச்சரித்துள்ளது.
சென்னை நகரில் விட்டு விட்டு மழை பெய்யும் எனவும் வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications