அபு சலேம், மோனிகா இந்தியாவிடம் ஒப்படைப்பு
டெல்லி:
![]() |
மும்பை தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடைய அபு சலேமையும் அவரது மனைவி மோனிகா பேடியையும் போர்சுகல் நாடுஇந்தியாவிடம் ஒப்படைத்தது. இதையடுத்து இருவரையும் சிபிஐ அதிகாரிகள் மும்பைக்கு கொண்டு வந்துள்ளனர்.
கடத்தல் மன்னன் தாவூத் இப்ராஹிமுடன் தொடர்புடைய சலேமுக்கு 1993ம் ஆண்டு 269 பேரை பலி கொண்ட மும்பை தொடர்குண்டு வெடிப்பில் நேரடித் தொடர்பு உண்டு. மேலும் பல்வேறு வழக்குகளில் போலீசாரால் தேடப்பட்டு வந்தார்.
ஆனால், அபு சலேம் போர்ச்சுகல் நாட்டில் தஞ்சம் புகுந்தார். அவரை நாடு கடத்தவும் தங்களிடம் ஒப்படைக்கவும் இந்தியாகோரி வந்தது.
இந் நிலையில் போலி ஆவணங்களை காட்டி போர்சுகலில் குடியேறியது தொடர்பாக 2002ம் ஆண்டு செப்டம்பரில் அந் நாட்டுபோலீசாரால் சலேம் கைது செய்யப்பட்டார். அவரது காதலியும் மாஜி இந்தி நடிதையுமான மோனிகா பேடியுடன் கைதுசெய்யப்பட்டார்.
இதில் மோனிகா பேடிக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், அபு சலேமுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கி போர்ச்சுகல்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதையடுத்து அபு சலேம், மோனிகா பேடி இருவரையும் தங்களிடம் ஒப்படைக்கக் கோரி இன்டர்போல் மூலமாக சிபிஐகோரியது. ஆனால், இதை எதிர்த்து இருவரும் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை போர்ச்சுகல் நாட்டின் லிஸ்பான்நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
நீண்டகாலமாக நடந்து வந்த இந்த வழக்கில் அபு சலேம் மற்றும் அவனது மனைவி மோனிகா பேடி இருவரையும்போர்ச்சுகலிலிருந்து வெளியேற்றி இந்தியாவிடம் ஒப்படைக்க நீதிமன்றம் நேற்று முன் தினம் உத்தரவிட்டது.இதை தொடர்ந்து போர்ச்சுகல் விரைந்தது சிபிஐ தனிப்படை. அவர்களிடம் அபுவும் மோனிகாவும் நேற்று ஒப்படைக்கப்பட்டனர்.
அவர்களைக் கைது செய்த சிபிஐ இருவரையும் உடனடியாக இந்தியாவுக்குக் கொண்டு வந்தது. இன்று அதிகாலை 2 மணிக்கு அபுமற்றும் மோனிகாவுடன் சிபிஐ படையினர் மும்பை விமான நிலையம் வந்து சேர்ந்தனர்.
அவர்கள் இன்று மும்பை தடா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர். பின்னர் மோசடி வழக்குத் தொடர்பாக மோனிகாபோபால் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்படவுள்ளார்.













Click it and Unblock the Notifications