இன்னும் போகலை புயல் சின்னம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தொடர்ந்து நகராமல் அதே இடத்தில்இருப்பதால் வடக்கு கடலோர தமிழகம் மற்றும் புதுவையில் இன்று காலை முதல் அடுத்த 24 மணி நேரத்திற்குபரவலாக மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவான இரு புயல் சின்னங்களினால் கடந்த 2 வாரங்களாக தமிழகத்தின் வட பகுதி முழுவதும்தொடர்ந்து கன மழை பெய்து வெள்ளக் காடாக்கி விட்டது.

இந் நிலையில் ஒரு புயல் சின்னம் நகர்ந்து அரபிக் கடலுக்குப் போய் விட்டது. இன்னொரு புயல் சின்னம்வலுவிழந்து விட்டதாக நுங்கம்பாக்கம் வானிலை ஆராய்ச்சி நிலையம் நேற்று தெரிவித்தது.

இந் நிலையில் மழை நின்று வெயில் அடிக்க ஆரம்பித்தது. ஆனால், வலுவிழந்த புயல் சின்னம் கலையாமல்தொடர்ந்து அதே இடத்தில் நிலை கொண்டிருப்பதாக இன்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் வடக்குக் கடலோர தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தொடர்ந்து பரவலாகமழை பெய்யும் எனவும் கூறியுள்ளது.

தென் தமிழகத்தில் மணியாச்சி, சிவகங்கை, திருப்பத்தூர் ஆகிய இடங்களில் இன்று பரவலாக மழை பெய்துள்ளது.

சென்னையில் ஓரிரு இடங்களில் தூறல் மழை இருந்தது. வானம் பொதுவாக மேகமூட்டமாகவே காணப்படுகிறது.வட மாவட்டங்களில் சிலவற்றில் லேசான மழை பெய்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+