போலி வாக்காளர்கள்: அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க தடை கூடாது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகம் முழுவதும் போலி வாக்காளர்களை சேர்த்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் தடைவிதிக்ககூடாது என்று தேர்தல் கமிஷன் கோரியுள்ளது.

தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கில் போலி வாக்காளர்களை அதிமுகவினர் சேர்த்துள்ளனர் என்று தேர்தல்கமிஷனுக்கு திமுக தரப்பில் புகார் தரப்பட்டது. இதை தொடர்ந்து தேர்தல் அதிகாரிகள் தமிழகம் முழுவதும்விசாரணை நடத்தினர்.

போலி வாக்காளர்களை தேர்தல் கமிஷன் கண்டுபிடித்து 13 லட்சம் போலி வாக்காளர்களை நீக்கி உத்தரவிட்டது.

போலி வாக்காளர்களை சேர்த்த அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் கமிஷன்அறிவித்தது.

ஆனால், இந்த நடவடிக்கைக்கு தடை விதிக்க கோரி தேர்தல் கமிஷன் மீது அதிமுக தேர்தல் பணிக்குழுசெயலாளரும் பொதுப்பணித்துறை அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தார்.

மனுவை நீதிபதி பி.டி.தினகரன் விசாரித்து தேர்தல் கமிஷன் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கைடிவிஷன் பெஞ்சு விசாரணைக்கு அனுப்பி வைத்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படாமல் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்தது. இந்தவழக்கில் தங்களையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று கோரி திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமிசென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஆர்.பாலசுப்பிரமணியம், ஏ.தணிகாசலம் ஆகியோர் முன் விசாரணைக்குவந்தது. அப்போது அதிமுக சார்பாக வக்கீல் என்.ஜோதி, திமுக சார்பாக இரா.விடுதலை, தேர்தல் கமிஷன் சார்பாகராஜ கோபால் ஆகிய வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதாடினார்கள்.

ஜோதி வாதாடுகையில், போலி வாக்காளர்களை சேர்த்தவர்கள் மீது ஒட்டு மொத்தமாக நடவடிக்கை எடுக்கப்படும்என்று தேர்தல் கமிஷன் கூறியுள்ளது. இதை ஏற்க கூடாது. அப்படி நடவடிக்கை எடுத்தால் அதிமுகவினர்பாதிக்கப்படுவார்கள்.

தற்போதுள்ள சட்டப்படி நடவடிக்கை எடுக்க தேர்தல் கமிஷனுக்கு அதிகாரமில்லை. எனவே அதிமுகவினர் மீதுதேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க தடைவிதிக்க வேண்டும் என்றார்.

இதை தொடர்ந்து வாதாடிய திமுக வழக்கறிஞர் விடுதலை, போலி வாக்காளர்களை அதிமுகவினர் லட்சக்கணக்கில்சேர்த்துள்ளனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் கமிஷனுக்கு முழு அதிகாரம் உள்ளது. இதற்குதடைவிதிக்க கூடாது.

அவர்களின் வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. அந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்.

தேர்தல் கமிஷன் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் ராஜகோபால்,

போலி வாக்காளர்களை சேர்த்தவர்கள் யார், எந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் தேர்தல் கமிஷன்சட்டப்படி பாகுபாடின்றி நடவடிக்கை எடுக்கும். இதற்கு அதிகாரம் உள்ளது. இதை தடை செய்யக் கூடாது.

மக்கள் பிரநிதித்துவ சட்டம் பிரிவு 31ன் படி போலி வாக்காளர்களை சேர்த்தவர்களை கண்டுபிடித்து இந்தியதண்டனை சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று சட்டத்தில் தெளிவாக கூறியுள்ளது.

16 வயதுக்கு கீழ் உள்ளவர்களையும், வேறு மாநிலத்தில் உள்ளவர்களையும் போலியாக சேர்த்துள்ளதை கண்டுபிடித்துள்ளோம்.

இதுவரை நடவடிக்கை எடுக்காத நிலையில், நடவடிக்கை எடுக்கவே கூடாது என்று தடை கோரி அதிமுக சார்பில்தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். தேர்தல் கமிஷனின் நடவடிக்கைக்கு தடைவிதித்தால் ஜனநாயகமே பாதிக்கப்படும் என்றார்.

இதை தொடர்ந்து விசாரணையை நீதிபதிகள் வரும் புதன் கிழமைக்கு ஒத்தி வைத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+