ஆடிட்டருக்கு அடி வழக்கு: நீதிமன்றத்தில் ஜெயேந்திரர் ஆஜர்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் உள்ளிட்ட 10 பேர் இன்றுசென்னை நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கு சென்னை 6வது அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்தவழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது ஜெயேந்திரர், ரகு, சுந்தரேச அய்யர், கதிரவன் உள்ளிட்ட 10 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.அப்ரூவர் ரவி சுப்பிரமணியனும் ஆஜராகியிருந்தார்.
அப்போது வழக்கில் குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்வதற்காக விசாரணையை வேறு தேதிக்கு ஒத்திவைப்பதாகநீதிபதி அறிவித்தார். அப்போது குறுக்கிட்ட ஜெயேந்திரரின் வழக்கறிஞர், இந்த வழக்கில் ஜெயேந்திரர் தரப்பில்ஆட்சேபனை மனு தாக்கல் செய்யப்படவிருப்பதாகத் தெரிவித்தார்.
இதையடுத்து அவரது ஆட்சேபனையை பதிவு செய்யும் வகையில் வருகிற 25ம் தேதிக்கு விசாரணையைஒத்திவைப்பதாக நீதிபதி லட்சுமி நாராயணன் அறிவித்தார்.












Click it and Unblock the Notifications