மதுரை மேயருக்கு மருத்துவப் பரிசோதனை

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரை மாநகராட்சி பெண் கவுன்சிலர் பாண்டீஸ்வரி மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையாகியுள்ளமதுரை மாநகராட்சி மேயர் செ. ராமச்சந்திரன் மற்றும் இந்த வழக்கில் ஏற்கனவே கைதாகியுள்ள டிரைவர் கண்ணன் ஆகியோருக்குமதுரை அரசு பொது மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது.

மதுரை பாஜக கவுன்சிலர் பாண்டீஸ்வரி சில வாரங்களுக்கு முன்பு மதுரை பெருங்குடி அருகே நடந்த சாலை விபத்தில்மரணமடைந்தார். அவர் விபத்தில் இறக்கவில்லை, மதுரை மேயர் செ.ராமச்சந்திரன்தான் திட்டமிட்டு பாண்டீஸ்வரியைக்கொலை செய்து விட்டார் என்று அவரது கணவர் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த நிலையில் பாண்டீஸ்வரி விபத்து தொடர்பாக கண்ணன் என்பவர் போலீஸில் சரணடைந்தார். அவர் கொடுத்த தகவலின்படி,செ. ராமச்சந்திரன்தான் விபத்தில் சிக்கிய காரை ஓட்டி வந்தது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து செ. ராமச்சந்திரன் தலைமறைவாகி விட்டார். அவரை திருச்சியில் வைத்து போலீஸார் கைது செய்தனர். கைதுசெய்யப்பட்ட ராமச்சந்திரனுக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய போலீஸார் கோரிக்கை விடுத்தனர்.

இதை ஏற்ற மதுரை நீதிமன்றம், மருத்துவப் பரிசோதனை செய்ய அனுமதித்தது. அதன்படி, செ. ராமச்சந்திரன், கண்ணன்ஆகியோருக்கு மதுரை அரசு ராஜாஜி பொது மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+