ஆசிரியை மாயம்: போலீஸுக்கு நீதிபதிகள் சூடு
மதுரை:
குளித்தலை ஆசிரியை மீனாட்சி காணாமல் போன வழக்கை விசாரிக்க ஏன் இத்தனை தாமதம் என்று சிபிசிஐடிபோலீஸாருக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த ஆசிரியை மீனாட்சி காணாமல் போய் ஒரு ஆண்டாகி விட்டது. இந்தவழக்கை தற்போது சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி மீனாட்சியின் கணவர் ஜோதி ராமலிங்கம் மதுரைஉயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, ஏ.ஆர்.ராமலிங்கம் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு இன்று வழக்குவிசாரணைக்கு வந்தது. அப்போது சிபிசிஐடி தரப்பில் ஒரு புதிய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணைநடந்து வருகிறது. எனவே இறுதி அறிக்கை தாக்கல் செய்ய 6 வார கால அவகாசம் வழங்க வேண்டும் என்றுகோரப்பட்டிருந்தது.
இதைப் படித்த நீதிபதிகள் அதிருப்தியடைந்து, எத்தனை முறைதான் அவகாசத்தை நீட்டிப்பது? ஏன் இத்தனைதாமதம்? ஏன் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு விடக் கூடாது என்று கோபமாக கேட்டனர்.
சிபிசிஐடிக்கு மேலும் கால அவகாசம் தரக் கூடாது என்று ஜோதி ராமலிங்கத்தின் வழக்கறிஞரும் ஆட்சேபனைதெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வருகிற டிசம்பர் 2ம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்து அதற்குள்இறுதி விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று சிபிசிஐடிக்கு உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications