பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினர் சென்னைக்குள் நுழைய தடை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சுற்றுலா விசா மூலம் இலங்கையிலிருந்து சென்னைக்கு வந்த பாலஸ்தீன விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த 5 பேர்மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்பப்பட்டனர்.
விமானங்களை கடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக வந்த தகவலையடுத்து நாடு முழுவதும் உள்ள விமானநிலையங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.சென்னை விமான நிலையத்திலும், பாதுகாப்பும், கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந் நிலையில் சுற்றுலா விசா மூலம் இலங்கை வழியாக பாலஸ்தீன விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த 5 பேர்சென்னை வந்தனர்.
அவர்களிடம் தீவிர விசாரணை நடத்திய அதிகாரிகள், மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் கருத்தை கேட்டனர்.
ஐந்து பேரையும் மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்புமாறு வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியதன்பேரி அவர்கள் மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்பப்பட்டனர்.












Click it and Unblock the Notifications